கரை ஒதுங்கிய திருக்கை மீனுக்கு பிரசவம் பார்த்த சிறுவர்கள்!- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கரை ஒதுங்கிய திருக்கை மீன் ஒன்றுக்கு சிறுவர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வைலாகி வருகின்றன. அவற்றில் சில மட்டுமே ஆபூர்வமானதாகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையிலும் இருக்கும்.

அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப்பில் ஒரு வீடியோ வைரலாகியுள்ளது. அந்த வீடியோ வெளி நாடு ஒன்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரை ஒதுங்கிய வவ்வால் மீன்

கரை ஒதுங்கிய வவ்வால் மீன்

அதில் வாயில் ஏதோ சிக்கியதால் ஒரு திருக்கை மீன் கரை ஒதுங்கியுள்ளது. இதனை கடற்கரையில் விளையாடும் சிறுவர்கள் பார்க்கின்றர்.

வால் போன்ற ஒன்று

வால் போன்ற ஒன்று

மல்லாந்து கிடக்கும் அந்த திருக்கை மீனின் பிறப்புறுப்பில் வால் போன்று ஏதோ நீண்டு கொண்டு இருப்பதை பார்க்கின்றனர் சிறுவர்கள். அவர்களில் ஒருவன் அதனை பிடித்து இழுக்கிறான்.

மீனுக்கு பிரசவம் பார்த்த சிறுவர்கள்

மீனுக்கு பிரசவம் பார்த்த சிறுவர்கள்

அப்போது சுற்றியிருக்கும் மற்ற சிறுவர்கள் அந்த மீனின் குழந்தை குழந்தை என கூச்சலிடுகின்றனர். இதையடுத்து அந்த மீனின் வயிற்றுப் பகுதியை சிறுவர்கள் அழுத்த ஒவ்வொரு குட்டியாக பிரசவிக்கிறது அந்த மீன்.

4 குட்டிகள்

4 குட்டிகள்

இதேபோல் 4 குட்டிகளையும் பிரசவிக்க உதவுகின்றனர் சிறுவர்கள். அந்தக்குட்டிகள் அனைத்தும் அப்போதே கடலில் விடப்படுகிறது.

காப்பாற்றப்பட்ட தாய் மீன்

காப்பாற்றப்பட்ட தாய் மீன்

இதையடுத்து அந்த தாய் மீனின் வாயில் சிக்கியிருந்த தூண்டில் நரம்பு போன்றதையும் துண்டித்த சிறுவர்கள், அந்த மீனையும் பத்திரமாக கடலுக்குள் அனுப்பினர். இந்தக்காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த ஒருவரால் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The boys have seen a delivery for a fish from the shore. The video is became viral on social media
Please Wait while comments are loading...