For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை.. ஜனவரி 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்த ஹைகோர்ட்!

முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை ஜனவரி 9ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யக்கோரிய வழக்கு விச

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை ஜனவரி 9ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யக்கோரிய வழக்கின் விசாரணையை நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். உடல்நலம் தேறிவந்ததாக அறிவிக்கப்பட்ட அவர் திடீரென உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

The chennai High court adjourned Jayalalitha's death case!

இதையடுத்து ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பில் இருந்தும் புகார் எழுந்தது. இந்நிலையில் நாகையைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் ஞானசேகரன் என்பவர் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என அவர் கோரியிருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் 9ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

மேலும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிறப்பு புலனாய்வுத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்ற டிராபிக் ராமசாமியின் வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

English summary
The Madras High Court adjourned the hearing of Chief Minister Jayalalithaa's death case on 9th of January. ADMK worker filed a petition for demanding to submit Jayalalitha treatment-related document in court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X