அந்நிய செலாவணி மோசடி வழக்கு.. டிடிவி தினகரனுக்கு நீதிமன்றம் உத்தரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அந்நிய செலாவணி மோசடி வழக்கில் 6ஆம் தேதி சாட்சிகள் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய டிடிவி தினகரனுக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள வங்கியில் ரூ.1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலர் மற்றும் ரூ.44 லட்சம் இங்கிலாந்து பவுண்டுகளை மற்றொரு நிறுவனத்தின் பெயரில் சட்டவிரோதமாக முதலீடு செய்தது தொடர்பாக கடந்த 1996-ம் ஆண்டு டி.டி.வி.தினகரன் மீது மத்திய அமலாக்கப் பிரிவினர் அந்நிய செலாவணி மோசடி வழக்கைப் பதிவுசெய்தனர்.

The Egmore Criminal Court has ordered TTV Dinakaran

இந்த வழக்கு நீண்ட காலமாக எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வந்தது. இதனிடையே சென்னை ஹைகோர்ட் பிறப்பித்த உத்தரவின் படி, இந்த வழக்கின் விசாரணை கடந்த பிப்ரவரி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் வரை குறுக்கு விசாரணை நடந்து முடிந்துள்ளது.

இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த கேள்விகளைத்தான் கேட்க வேண்டும் என குற்றஞ்சாட்டபட்டவர் கேட்பது நீதிக்கு எதிரானது என்று டி.டி.வி. தினகரனுக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் 6ஆம் தேதி சாட்சிகள் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய டிடிவி தினகரனுக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Egmore Criminal Court has ordered TTV Dinakaran to file documents relating to witnesses on the 6th of this month on the Foreign exchange fraud case.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற