4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. சிறுவன் உட்பட 3 பேர் அதிரடி கைது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை: நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை அருகே உள் அகரகீரங்குடியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த 4 வயது பெண் குழந்தையை அருகில் உள்ள பாத்ரூமிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை தந்துள்ளார்.

The incident of sexual harassment for a four-year-old girl has created a shock near Mayiladuthurai

இதனை அவ்வழியே சென்ற பெண் ஒருவர் பார்த்து விட்டு அருகில் உள்ளவர்களை அழைத்து விக்னேசை மடக்கி பிடித்தனர். சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசாருக்கு இதுபற்றி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த இன்ஸ்பெக்டர் ராணி, விக்னேசை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது விக்னேஷ் போலீசாரிடம் நான் மட்டும் சிறுமிக்கு பாலியல் தொல்லை தரவில்லை. இதே பகுதியை சேர்ந்த கரூரில் படித்து வரும் வேல்கண்ணன் மற்றும் மற்றொரு சிறுவன் ஒருவன் ஆகியோரும் சிறுமியிடம் இதேபோல் நடந்து கொண்டுள்ளனர் என்று கூறினார்.

இவர்கள் 3 பேரும் கடந்த 3 மாதமாக சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த 17 வயது சிறுவன் மற்றும் விக்னேஷ், வேல்முருகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் விக்னேஷ் மற்றும் சிறுவன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். வேல்முருகனை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். 4 வயது சிறுமிக்கு 3 மாதமாக 3 பேர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் சிறுமியின் பெற்றோர் மற்றும் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The incident of sexual harassment for a four-year-old girl has created a shock near Mayiladuthurai. Three persons, including a minor boy, have been arrested.
Please Wait while comments are loading...