For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாறும்.. சென்னை வானிலை மையம்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி அதே இடத்தில் நீடிப்பதாக அவர் கூறினார்.

The Low depression formed in Bay of bengal will be strong within 12 hours: Chennai meteorological center

இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் அவர் கூறினார். தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா மற்றும் வடக்கு தமிழகத்தை நோக்கி நகர கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதனால் அடுத்த 4 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். தமிழகம், புதுச்சேரியில் மீனவர்கள் வரும் 8 ஆம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு சென்றவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் எங்கும் கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

English summary
The Low depression formed in Bay of bengal will be strong within 12 hours Chennai meteorological center. The Tamilnadu and puducherry fishermen do not venture into sea till 8th December Chennai meteorological center.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X