பெண்ணாடம் அருகே கொடிகம்ப மேடையில் தூங்குவதில் தகராறு.. கத்தியால் குத்தி தொழிலாளி கொலை.. ஒருவர் கைது
கத்தியால் குத்தி ஒருவரை கொலை செய்தது தொடர்பாக தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர்: பெண்ணாடம் அருகே கொடிகம்ப மேடையில் தூங்குவதற்கு இடம் பிடிப்பது தொடர்பாக நடைபெற்ற தகராறில் ஒருவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணாடம் அருகே பெலாந்துறை கிராமத்தை சேர்ந்தவர்கள் முருகன், முருகையன். இருவருமே கூலி தொழிலாளிகள். இருவரும் இரவு நேரங்களில் கட்சியின் கொடிகம்பம் இருக்கும் மேடைகளில்தான் படுத்து தூங்குவது வழக்கம் என கூறப்படுகிறது.

யார் முதலில் அந்த மேடையில் படுத்து தூங்க இடம் பிடிப்பது என இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு வருமாம். அதேபோல, நேற்றிரவு முருகையன் கொடிகம்ப மேடைக்கு வந்து முதலில் இடத்தை பிடித்து தூங்க ஆரம்பித்துள்ளார். இதனை கண்ட முருகன் கோபம் அடைந்ததுடன், அவரை எழுப்பி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரம் அதிகமாகி, தன்னிடம் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகையனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே முருகையன் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
இன்று காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் முருகையன் படுகொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வழக்கமாக முருகையனிடம் மேடையில் இடம்பிடிப்பது தொடர்பாக தகராறில் ஈடுபடும் முருகனை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது தாம் கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து முருகனை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications