For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சன் குழுமம் எஃப்.எம். ஏலத்தில் பங்கெடுப்பதற்கான தடை நீக்கம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: எஃப்.எம். ரேடியோ நிலையங்களுக்கான ஏலத்தில் சன் குழுமம் பங்கேற்பதற்கு அனுமதி மறுத்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு அனுமதி மறுத்ததை சுட்டிக்காட்டி சன் குழுமத்தைச் சேர்ந்த சன் டிவி, கல் ரேடியோ, சவூத் ஏசியா எஃப்.எம்., உதயா எஃப்.எம் ஆகிய நிறுவனங்கள் எஃப்.எம். ஏலத்தில் பங்கேற்பதற்கு தடை விதித்து மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் துணை இயக்குநர் 2015 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி உத்தரவிட்டார்.

 The rejection prompted Sun Group to approach the High Court

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி, சன் குழுமம் மீதான தடையை ரத்து செய்தார். எஃப்.எம். ஏலத்தில் பங்கேற்க பாதுகாப்பு அனுமதி பெற வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி இல்லாத நிபந்தனையை காரணம் காட்டி அனுமதி மறுத்தது தவறு என்றும், ஏல முடிவுகளை மத்திய அரசு வெளியிடலாம் என்றும் கூறியுள்ளார்.

English summary
The madras high court allows Sun Group to take part in FM auctions
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X