கமல் படங்கள் வெளியாகும் தியேட்டர்கள் நொறுக்கப்படும்: இந்து அமைப்பு பகிரங்க மிரட்டல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கமல்ஹாசன் திரைப்படங்கள் திரையிடப்படும் தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்படும் என்று வலதுசாரி இந்து அமைப்புகள் இணைந்து மிரட்டல்விடுத்துள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யகோரி கமல் வீட்டை முற்றுகையிட்டு இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் இன்று போராட்டம் நடத்தின. போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர்.

இதனிடையே, போராட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய இந்து அமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:

தியேட்டர்கள் நொறுக்கப்படும்

தியேட்டர்கள் நொறுக்கப்படும்

இந்து அதிரடிபடை, சிவசேனா, இந்து மக்கள் கட்சி ஆகியவை இணைந்து, கமல்ஹாசன் திரைப்படங்கள் வெளியிடும் இடமெல்லாம் தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்படும். கமல் இதுபோன்ற கலாசார சீர்கேட்டில் ஈடுபட கூடாது.

குட்டை பாவாடை

குட்டை பாவாடை

சிறிய உடை அணிவது தப்பில்லை. வீதியில் வந்து பாருங்கள், எல்லோரும் குட்டை பாவாடை அணிந்து செல்கிறார்கள் என்று கமல் கருத்து தெரிவித்துள்ளார். கமல் இதுபோன்ற கலாசார சீர்கேட்டில் ஈடுபட கூடாது.

சின்னத்திரைக்கு சான்றிதழ்

சின்னத்திரைக்கு சான்றிதழ்

திரைப்படங்களுக்கு ஏ சான்றிதழ்கள் அளிக்கப்படுகிறதை போல, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் சர்டிபிகேட் தேவை. இதே கலாசார சீரழிவு தொடர்ந்தால் தமிழக திரைத்துறையே அழிந்துவிடும்.

சூதாட்டம்

சூதாட்டம்

வீதியிலேயே சூதாட்டம் எங்கு நடைபெற்றாலும் காவல்துறை கைது செய்கிறது. டிவியில் குரோர்பதி என்ற பெயரிலும் அதே சூதாட்டம் நடக்கிறது. அதை தடை செய்ய வேண்டும்.

குத்தாட்டம்

குத்தாட்டம்

நடனம் என்ற பெயரில் கலா மாஸ்டர் டிவியில் நிகழ்ச்சி நடத்துகிறார். நிகழ்ச்சி முழுக்க உடலில் குட்டி துணியை போட்டுக்கொண்டு பெண்களும், ஆண்களும் கட்டியணைத்து ஆடுகிறார்கள். இவ்வாறு அந்த நிர்வாகிகள் குற்றம்சாட்டி பேட்டியளித்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Theaters which will screen Kamal Haasan's films will be smashed and shattered, Hindu People's Party warns.
Please Wait while comments are loading...