இரு அணிகளும் இணைய வாய்ப்பே இல்லை.. ஓபிஎஸ் திட்டவட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: அதிமுகவின் இரு அணிகளும் இணைய வாய்ப்பே இல்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைக்கு என அமைக்கப்பட்ட குழு ஏற்கனவே கலைக்கப்பட்டுவிட்டது என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

அதிமுகவின் இரு அணிகளும் விரைவில் இணைந்து விடும் என எடப்பாடி அணியின் நிர்வாகிகளும் அமைச்சர்களும் கூறி வருகின்றனர். இரு அணி பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்ட 7 பேர் கொண்ட குழுவை ஓபிஎஸ் அணி அண்மையில் கலைக்கப்பட்டது.

there is no chance for joining two teams of AIADMK:OPS

இதனால் பேச்சுவார்த்தை நடத்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. சசிகலா தரப்பும் இரு அணிகளும் இணைய 60 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளது.

இந்நிலையில் உசிலம்பட்டியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஜெயலலிதாவின் விருப்பப்படி குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக பாஜகவுக்கு ஆதரவு கொடுத்துள்ளதாக அவர் கூறினார்.

மேலும் அதிமுகவின் இரு அணிகளும் இணைய வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார். பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்ட குழு கலைக்கப்பட்டுவிட்டதாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former Chief Minister O.Panniriselvam said the there is no chance for joining two teams of AIADMK. The Committee has already been dissolved, said Panneerselvam.
Please Wait while comments are loading...