புதுச்சேரி பண்ணை வீட்டில் பாதாள அறையா.. சிரித்து மறுத்த தினகரன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பண்ணை வீட்டில் ரகசிய பாதாள அறைகள்....சாணி, உரம் இருந்ததா?- வீடியோ

  சென்னை:சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான நிறுவனங்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் மூன்றாவது நாளாக இன்று சோதனைன நடத்தி வருகின்றனர். இதில் பல முக்கிய ஆவணங்கள், தங்க நகைகள் மற்றும் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

  இந்நிலையில் அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வருமான வரித்துறை ரெய்டு உள்நோக்கம் கொண்டது என அவர் குற்றம் சாட்டினார்.

  உள்நோக்கம் தெரியவில்லை

  உள்நோக்கம் தெரியவில்லை

  ஆனால் அந்த உள்நோக்கம் என்ன என்பது தெரியவில்லை என்றும் அவர் கூறினார். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ரெய்டு நடப்பதாக கூறி ஆதரவு தெரிவித்த திருமாவளவன், வைகோ, ஜிகே வாசன், வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

  ரெய்டை வரவேற்கிறோம்

  ரெய்டை வரவேற்கிறோம்

  வருமானவரித்துறை சோதனைக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் டிடிவி தினகரன் கூறினார். வருமான வரித்துறை சோதனையை நாங்கள் வரவேற்கிறோம் என்றும் அவர் கூறீனார்.

  பாதாள அறைகள் இல்லவே இல்லை

  பாதாள அறைகள் இல்லவே இல்லை

  புதுச்சேரி அருகே பொம்மையார் பாளையத்தில் உள்ள வீட்டில் பாதாள அறைகள் உள்ளதாக வெளியான தகவலையும் அவர் மறுத்தார். புதுச்சேரி பண்ணைவீட்டில் பாதாள அறைகள் டிஜிட்டல் லாக்கர் என எதுவும் இல்லை என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

  பேஸ்மென்ட்டே இல்லை

  பேஸ்மென்ட்டே இல்லை

  பண்ணை வீட்டில் பேஸ்மென்ட்டே இல்லை என்றும் அவர் கூறினார். பெசன்ட் நகர் வீட்டில்தான் பேஸ்மென்ட் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

  காந்தி வாரிசுகள் இல்லை

  காந்தி வாரிசுகள் இல்லை

  மேலும் நான் ஒன்றும் காந்தி பேரன் அல்ல சாதாரண மனிதன் தான் என்று கூறிய தினகரன், எங்களை குறை சொல்பவர்கள் காந்தியின் பேரன் பேத்திகளா என்றும் கேள்வி எழுப்பினார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  TTV Dinakaran met press today. He said there is no secret rooms in Pomeri palayam form house.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X