கருணாநிதியை அடக்கம் செய்யும் சந்தனப் பேழையில் எழுதப்பட்ட வாசகம்.. இதுதான்!
Recommended Video

சென்னை: கருணாநிதி உடலை வைக்ககூடிய சந்தனப்பேழையில் அவர் விரும்பிய வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வெடுத்துக்கொண்டுள்ளான் என்று அதில் எழுதப்பட்டுள்ளது.
கருணாநிதி அதிகாலை 4.30 மணிக்கே தனது அன்றாட அலுவல்களை ஆரம்பித்துவிட கூடியவர். எனவே ஓய்வறியாச் சூரியன் என்று திமுகவினர் கருணாநிதி புகழ் பற்றி எடுத்துரைப்பது உண்டு.

இந்த நிலையில்தான், ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வெடுத்துக்கொண்டுள்ளான் என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் தனது கைப்பட எழுதிய கண்ணீர் அஞ்சலி மடல் ஒன்றை நேற்று ட்விட்டரில் வெளியிட்டார். அதில் ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வெடுத்துக்கொண்டுள்ளான் என்று உங்கள் நினைவிடத்தில் எழுத வேண்டுமென்று 33 ஆண்டுகளுக்கு முன்பே எழுதினீர்கள் என்று குறிப்பிட்டிருந்தார் ஸ்டாலின்.
கருணாநிதி ஆசைப்படி சந்தனப்பேழையில் இந்த வசனம் எழுதப்பட்டுள்ளது. எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது என்று அண்ணா நல்லடக்கம் செய்யப்பட்டபோது வாசகம் பொரிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications