மலையேற்றம் சென்றவர்கள் வனத்துறையிடம் அனுமதி பெறவில்லை.. முதல்வர் எடப்பாடியார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மலையேற்றம் சென்றவர்கள் வனத்துறையிடம் அனுமதி பெறவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

குரங்கணி மலைப்பகுதியில் ட்ரெக்கிங் சென்றவர்கள் அங்கு ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கினர். அவர்களில் 10 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

They did not ask permission for the trekking: Chief minister Edappadi palanisami

காயமடைந்தவர்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ ஆகியோர் உடனிருந்தனர்.

இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மலையேற்றம் சென்றவர்கள் வனத்துறையிடம் அனுமதி பெறவில்லை என அவர் கூறினார்.

கோடை காலத்தில் மலையேற்றம் செல்வது அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் கோடை காலத்தில் வன விலங்குகள் தண்ணீர் தேடி வரும் என்பதால் அனுமதி தருவதில்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chief Minister Edappadi Palanisami meets people who gets treatment in Madurai govt hospital. CM says they did not ask permission for the trekking.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற