அரசின் முடிவைக் காதில் வாங்காமல் ஸ்டிரைக் நடத்துகிறார்கள்... அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழக அரசின் முடிவைக் காதில் வாங்காமல் எதிர்க்கட்சிகளின் தொழிற்சங்கங்கள் தமிழகம் முழுக்க வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை: போக்குவரத்துத்துறை தொழிலாளர்கள் சங்கத்தினர் சென்னையில் இன்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையை அமைச்சர் விஜயபாஸ்கருடன் நடத்தினர். அதில் சுமூக முடிவு கிடைக்க அரசு சில முடிவுகளைக் கூறியது என்றும் அதனை தொழிற்சங்கத்தினர் காதில் போட்டுக்கொள்ளவில்லை என்றும் அமைச்சர் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அமைச்சர் விஜயபாஸ்கர். அப்போது அவர் கூறுகையில், தொழிலாளர்கள் ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.கடந்த 7ம் தேதி முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அதில் சில முடிவு எடுக்கப்பட்டது. அதனை தொழிற்சங்கத்தினர் ஒப்புக்கொண்டார்கள். ஆனால் பின்னர் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

மீண்டும் பின்னர் 8ம் தேதி பேச்சுவார்த்தை நடந்தது. அதில் தொமுச, சிஐடியூ உள்ளிட்ட 10 சங்கங்கள் கலந்துகொண்டன. அவர்கள்தான் அரசின் முடிவை எதிர்க்கிறார்கள். 1250 கோடி ரூபாயை முதல் தவணையாக கொடுக்க அரசு ஒப்புதல் அளித்தது. முதல்வர் வாக்குறுதியளித்தும், தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்துகிறார்கள் என்றால், அவர்கள் அரசியல் செய்கிறார்கள் என்று தெரிகிறது.
மொத்தமுள்ள 47 தொழிற்சங்கங்களில் 37 சங்கங்கள் அரசுக்கு ஆதரவாக இருக்கின்றன. அதனால் அவர்கள் நடத்தும் போராட்டத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு வராமல் பார்த்துக்கொள்வோம். ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களை வைத்து மாநிலம் முழுக்க பேருந்துகளை இயக்க முடிவு எடுத்துள்ளோம்" என்று கூறினார்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications