சீமான், திருமாவளவனுக்கு மனநிலை சரியில்லை - எச்.ராஜா வன்மம்: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

கரூர்: சீமான் மற்றும் திருமாவளனுக்கு மனநிலை சரியில்லை என நினைக்கிறேன் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

கரூரில் பாஜக அரசின் மூன்றாண்டு கால சாதனை விளக்க்கக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா, அரசியலில் மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். நான் கூட மிக கடுமையாக விமர்சிக்கக் கூடியவன் தான். ஆனால் அநாகரீகமாக யாரையும் விமர்சிக்கக் கூடாது.

 Thirumavalavan and Seeman do not have mental balance said H.Raja

திருமாவளவன், சீமான் போன்றவர்களுக்கு மெண்டல்பேலன்ஸ் உள்ளதா? இல்லையா?மெண்டல் பேலனஸ் இல்லையென்றால் அதற்கு காரணம் என்ன? என்று தெரியவில்லை.

இப்தார் விருந்துக்குப் போன திருமாவளவன் கஞ்சி குடித்துவிட்டு வந்திருக்க வேண்டும். அதைவிடுத்து பிரதமர் மோடி மாடு மேய்க்க தகுதி இல்லாதவர் என பேசியுள்ளார்.

இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். திருமாவளவன் நாவடக்கிப் பேச வேண்டும். திருமாவளவன் ஒரு தீயசக்தி. பிரதமர் குறித்து அவர் பேசியதற்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என எச்சரிக்கும் விதத்தில் பேசினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Thirumavalavan and Seeman do not have mental balance said H.Raja, Bjp Leader in Karur.
Please Wait while comments are loading...