ராமதாஸின் தைலாபுரம் தோட்டத்துக்கு செல்லும் நிலை வந்தால் தூக்கு போட்டு சாவேன்: திருமாவளவன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸின் தலைபுரம் தோட்டத்துக்கு செல்லும் நிலை வந்தால் தூக்கு போட்டு சாவேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த டாக்டர் ராமதாஸும், திருமாவளவனும் வட தமிழகத்தின் அமைதிக்காக கை கோர்த்தனர். தமிழ் பாதுகாப்பு இயக்கத்தை இணணந்து முன்னெடுத்தனர்.

Thirumavalavan strongly denies alliance with Ramdoss

ராமதாஸுக்கு தமிழ் குடிதாங்கி என்ற பட்டம் கொடுத்தார் திருமாவளவன். ஆனால் வட தமிழகத்தில் ஜாதிய மோதல்கள் தீவிரமான நிலையில் இருவருக்குமான உறவு முறிந்தது. இருவரும் எதிர் எதிர் துருவங்களாக நிற்கின்றனர்.

இந்நிலையில் சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். அதில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், ராமதாஸின் தைலாபுரம் தோட்டத்துக்கு செல்ல நேர்ந்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கோள்வேன் என திருமாவளவன் ஆவேசமாக கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
VCK leader Thirumavalavan has strongly denied the alliance with PMK in future.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற