For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தென் சென்னையில் திமுகவின் சீனியர், அதிமுகவின் ஜூனியர் மோதல்: வெல்லப் போவது யார்?

By Siva
|

சென்னை: தமிழகத்தில் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் தென் சென்னை அதிமுக வேட்பாளரான டாக்டர் ஜெயவர்தன் தான் மிகவும் வயது குறைவான வேட்பாளர் ஆவார்.

கடந்த 1996ம் ஆண்டில் இருந்து திமுகவின் கோட்டையாக இருந்து வரும் தொகுதி வட சென்னை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வட சென்னையில் திமுக சார்பில் டி.கே. எஸ். இளங்கோவன் போட்டியிட்டு வென்றார். ஆனால் இம்முறை அவர் தென் சென்னை பகுதியில் போட்டியிடுகிறார்.

தென் சென்னையில் அவரை எதிர்த்து அதிமுக சார்பில் வெறும் 26 வயதே ஆன டாக்டர் ஜெயவர்தன் போட்டியிடுகிறார். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் இவர் தான் மிகவும் இளம் வேட்பாளர் ஆவார்.

This is Tamil Nadu's youngest candidate: a 26-year-old doctor

டாக்டர் ஜெயவர்தன் ஐ.டி. நிறுவனங்கள் அதிகம் இருக்கும் தென் சென்னையில் இளம் வாக்காளர்களை கவர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவரோ தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில், மாணவர்களுக்கு இலவச லேப்டாப், பெண்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர் வழங்குவதாக கடந்த சட்டசபை தேர்தலின்போது ஜெயலலிதா அளித்த அதே வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

ஒரு இளம் வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுவடுபவது பற்றி இளங்கோவன் கூறுகையில், மனதளவில் நானும் ஒரு இளைஞன் தான் என்றார்.

English summary
ADMK's South Chennai candidate Doctor Jayavardhan(26) is the youngest candidate in Tamil Nadu in this lok sabha election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X