For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிழிந்து பாதியாக தொங்கும் அதிமுக கொடி.. அனாதையாக விடப்பட்ட ஜெ சமாதி.. தொண்டர்கள் ஷாக்!

யார் அதிமுக என்று சசிகலா குரூப்பும், ஒபிஎஸ் அணியும் சண்டை போட்டுக்கொண்டிருக்க, கட்சியை 30 ஆண்டுகாலமாக கட்டிக்காத்த ஜெயலலிதாவின் நினைவிடம் கேட்பாரற்று உள்ளது. அதிமுக கட்சிக் கொடி கிழிந்து பறக்கிறது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா மரணமடைந்து 5 மாதங்களுக்கு உள்ளாகவே அவரது நினைவிடத்தை சரியாக கவனிக்காமல் விட்டுள்ளனர். அதிமுக கட்சிக்கொடி கிழிந்து பறக்கிறது உண்மையான தொண்டர்களை அதிர்ச்சிடைய வைத்துள்ளது.

நான் இல்லாவிட்டாலும் எனக்குப் பின்னாலும் 200 ஆண்டுகள் அதிமுக இருக்கும் என்று சட்டசபையில் கடந்த ஆகஸ்ட் மாதம் கம்பீரமாக பேசினார் அப்போதய முதல்வர் ஜெயலலிதா.

செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அமைச்சர்கள் முதல் தொண்டர்கள் வரை வாசலில் தவம் கிடந்தனர். அவரது மறைவு செய்தி தெரிந்தும் அவசரம் அவசரமாக நள்ளிரவில் பதவியேற்றனர்.

சசிகலா சபதம்

சசிகலா சபதம்

ஜெயலலிதாவின் உடன் எம்ஜிஆர் நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் நினைவிடம் எழுப்பப்படும் என்று கூறினார்கள். தொண்டர்கள் தொடர்ந்து ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்து பூத்தூவி வணங்கி சென்றனர். சசிகலா சிறைக்குப் போகும் முன்பு ஓங்கி அடித்து சபதம் செய்து டுவிட்டரில் ட்ரெண்ட் ஆக்கினார்.

ஜெயலலிதா சமாதி

ஜெயலலிதா சமாதி

ஓபிஎஸ் முதல் தீபாவின் கணவர் வரை ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று தியானம் இருந்தனர். அம்மாவின் ஆன்மாவிடம் பேசி வந்தனர். சசிகலா போனார் சிறைக்குப் போனார், ஓபிஎஸ் போனார் பதவியிழந்தார், தீபா போனார் கணவரைப் பிரிந்தார் என்று கிளப்பிவிடுகின்றனர். ஆனால் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குப் போனால் நல்லாதாக நடப்பதில்லையே என்று நினைத்தோ என்னவோ அதிமுக பெருந்தலைகள் யாரும் இப்போது ஜெயலலிதா நினைவிடம் பக்கம் செல்வதில்லை.

கிழிந்து பறக்கும் கொடி

கிழிந்து பறக்கும் கொடி

விவிஐபிக்கள் வரும் போது மலர்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதா நினைவிடம் இப்போது கேட்பாரற்று கிடக்கிறது. அதிமுக கட்சிக்கொடியே கிழிந்து பறக்கிறது. இத்தனை சீக்கிரம் ஜெயலலிதாவை அநாதையாக்குவார்கள் என்று யாரும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். அதிமுக என்ற கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் முடக்க வைத்து விட்டார்கள்.

சண்டைகள்

சண்டைகள்

கட்சி யாருக்கு, பதவி யாருக்கு தலைமை அலுவலகத்தை யார் கைப்பற்றுவது என்று நடக்கும் சண்டையிலேயே இப்போது இரு அணிகளுக்கும் நேரம் சரியாக இருக்கிறது. இதில் எங்கே ஜெயலலிதா சமாதிக்கு போக நேரம் கிடைக்கப் போகிறது?

கண்டு கொள்ளாத பிரமுகர்கள்

கண்டு கொள்ளாத பிரமுகர்கள்

ஜெயலலிதா என்ற பெயரை வைத்தே கோடி கோடியாக சம்பாதித்தவர்களும், இன்றைக்கும் அவரது பெயரை சொல்லி பிழைப்பு நடத்துபவர்களும் இப்போது கண்டு கொள்வதில்லை. ஜெயலலிதா உயிரோடு இந்த போது பதவி பெற வேண்டி நடித்த பலரும், இன்றைக்கு சமாதியின் பக்கம் கூட தலை வைத்து படுப்பதில்லை என்பதுதான் சோகம். சாதாரண தொண்டர்கள்தான் வழக்கம் போல பூக்களை தூவி ஜெயலலிதாவை வணங்கி வருகின்றனர்.

English summary
The ADMK flag is flying very pathetic in Jayalalitha samathi in Chennai and nobody is there to take care of the samathi too.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X