For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லோக்சபா தேர்தல்: அதிமுக- 27; திமுக- 5; தேமுதிக- 2; காங்கிரஸ்-1 இடம்- டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு

By Mathi
|

சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் அதிமுக 27 தொகுதிகளையும் திமுக 5 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றும் என்று டைம்ஸ் நவ்- சிவோட்டர் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் தற்போது நடைபெற்றால் நாடு முழுவதும் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நேற்று வெளியிட்டது. அதில் தமிழகத்தில் அதிமுக 27 இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெ.ஜே!

ஜெ.ஜே!

கடந்த லோக்சபா தேர்தலில் 9 இடங்களை பெற்றிருந்தது அதிமுக. இம்முறை 27 தொகுதிகளை அக்கட்சி கைப்பற்றுமாம். 27 தொகுதிகளைக் கைப்பற்றினால் 3வது அணியில் அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக, பிரதமரை தீர்மானிக்கும் கட்சியாக அதிமுக உருவெடுக்க வாய்ப்புள்ளது.

திமுகவுக்கு 5

திமுகவுக்கு 5

அதே நேரத்தில் கடந்த தேர்தலில் 18 தொகுதிகளைக் கைப்பற்றிய திமுகவுக்கு இம்முறை 5 தொகுதிகள்தான் கிடைக்குமாம்.

காங்கிரஸுக்கு ஒன்னே ஒன்னு..

காங்கிரஸுக்கு ஒன்னே ஒன்னு..

8 தொகுதிகளை கடந்த தேர்தலில் வென்றிருந்த காங்கிரஸ் கட்சிக்கோ இம்முறை ஒரே ஒரு இடம்தான் கிடைக்கும். (எந்த தொகுதியாக இருக்கும்?)

தேமுதிகவுக்கு 2

தேமுதிகவுக்கு 2

தமிழகத்தைப் பொறுத்தவரையில் "பேரம் பேச"க்கூடிய கட்சியாக அடையாளப்படுத்தப்படும் தேமுதிகவுக்கு 2 தொகுதிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறதாம்.

தலா 1

தலா 1

இதுதவிர இடதுசாரிகளுக்கு தலா 1 தொகுதியும் மதிமுகவுக்கு ஒரு தொகுதியும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு தொகுதியும் கிடைக்கக் கூடுமாம்.

சீனிலே இல்லாத பாஜக

சீனிலே இல்லாத பாஜக

"மெகா" கூட்டணி கற்பனையில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பின் "சீனிலேயே" வரவில்லையே..

English summary
Times Now and CVoter poll predicts ADMK leader and Tamilnadu CM Jayalalithaa emerging strong winner with 27 seats in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X