For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செப்.9ல் நீட் சட்ட நகல் எரிப்பு போராட்டம் - திருமாவளவன் அழைப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெறும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வருகின்ற செப்டம்பர் 9 ஆம் தேதி நீட் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்விற்கு எதிரான மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு நடைபெற்று வரும் போராட்டங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று வருகின்றனர். மாணவர்கள் போராட்டம் ஒருபுறம் இருக்க அரசியல் கட்சிகளும் தங்கள் சார்பில் போராட்டங்களை அறிவித்து வருகின்றன.

Tirumavalavan to hold protests on Sep 9

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் வருகிற 9 ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நீட் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெறும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நீட் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 9-ம் தேதி நீட் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற உள்ளதா விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''மாணவி அனிதாவின் உயிரிழப்புக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளின் போக்குகளைக் கண்டித்தும் நீட் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாணவர் அமைப்பான முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில் செப்டம்பர் 9-ம் தேதி, தமிழக முழுவதும் நீட் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

அனிதாவின் குடும்பத்திற்கு வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் அளிக்கப்படும் ரூ. 7 லட்சத்தை வழங்குவதாக தமிழக முதல்வர் அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது வன்கொடுமைகள் நிகழ்கிறபோது மத்திய அரசின் சார்பில் சட்டப்படி வழங்கப்படும் இழப்பீடாகும். இதைத்தான் முதல்வர் அறிவித்திருப்பதாக தெரிகிறது. தமிழக அரசின் சார்பில் அந்தக் குடும்பத்திற்கு நிதி வழங்கவேண்டும் என்கிற இரக்கம் தமிழக முதல்வர் அவர்களிடம் இல்லையென்பது வேதனைக்குரியது. இந்த நிதி ஏழு லட்சத்தையும் வேண்டாம் என்று அனிதா குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

அரசு வேலைவாய்ப்பு வழங்கப் போவதாக தமிழக அரசு அறிவித்திருந்தாலும், அதைப் பெரிதாகக் கருதாமல் அனிதா குடும்பத்தினர் 'நீட் தேர்வை நடைமுறைப்படுத்தவே கூடாது; முழுமையாக அதை ரத்து செய்ய வேண்டும்' என்று வலியுறுத்துவது வரவேற்கக்கூடியதாகும்.

இந்நிலையில், நீட் தேர்வை இனி எக்காலத்திலும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி, முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் நீட் சட்ட நகல் எரிப்பு பேராட்டத்தில் பங்கேற்கிறார்கள். இந்தப் போராட்டத்தில் கட்சி சார்ந்த மற்றும் கட்சி சாராத மாணவ, மாணவியர்கள் ஆங்காங்கே பெருந்திரளாய் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கிறோம். முற்போக்கு மாணவர் கழகத்தின் அழைப்பை ஏற்று மாணவச் சமூகம் வெகுண்டெழ வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்'' என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்..

English summary
Tirumavalavan to hold protests on Saturday, 9th September 2017.VCK leader Tirumavalavan today announced an agitation in the matter to protect social justice.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X