ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை அடுத்த மாதம் திறக்கப்படும்: தருண்விஜய் தகவல்
சென்னை: ஹரித்துவாரில் பிப்ரவரி மாதத்தில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படும் என்று பாஜக எம்.பி. தருண் விஜய் சென்னையில் தெரிவித்தார்.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு சேவாபாரதி அலுவலகத்திற்கு நேற்று மாலை பாஜக எம்.பி. தருண் விஜய் வருகை தந்தார். அவரை சேவாபாரதி நிர்வாகிகள் வரவேற்றனர்.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, விரைவாக செயல்பட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்ட சேவா பாரதி நிர்வாகிகளை தருண்விஜய் பாராட்டினார். பின்னர் நிவாரண பணிக்காக ரூ.20 லட்சம் வழங்குவதாக அவர் அறிவித்தார்.

நிருபர்களிடம் தருண் விஜய் கூறியதாவது: வரலாறு காணாத மழையால் தமிழக மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒருவருக்கொருவர் உதவிக்கரம் நீட்டியது பாராட்டுக்குரியது. தமிழக மக்களை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. வெள்ள நிவாரண உதவியாக தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சத்தை வழங்கி இருக்கிறேன். நிவாரண பணி மற்றும் கட்டிட பணிக்காக சேவாபாரதியிடம் ரூ.20 லட்சம் வழங்கி உள்ளேன்.
மனிதவள மேம்பாட்டு துறை மூலம் திருக்குறளை மொழியாக்கம் செய்து சர்வதேச அளவில் பரப்ப நடவடிக்கை மேற்கொள்வேன். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை பிப்ரவரி மாதம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications