மோடிக்கு ரத்தம் அனுப்புவோம்.. மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் அதிரடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்குத் தீர்வு காணக் கோரி பிரதமர் மோடிக்கு ரத்ததானம் செய்து ரத்த பாட்டிலை அனுப்பப் போவதாக தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத் தலைவர் செல்லபாண்டியன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக விவசாயிகள் தொடர்ந்து டெல்லியில் போராடிக் கொண்டுள்ளனர். அதற்கு தீர்வு காணப்படாமல் உள்ளது.

TN anti liquor association to send blood to Modi on April 19

எனவே பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடி தீர்வு காண வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, நாங்கள் ரத்ததானம் செய்து பாட்டிலை அனுப்பப் போகிறோம். தலைமைத் தபால் அலுவலகத்திலிருந்து ஏப்ரல் 19ம் தேதி புதன்கிழமை இந்தப் போராட்டம் நடத்தப்படும்.

டெல்லி போராட்டத்திற்கு உடனடியாக தீர்வு கண்டிட வேண்டி இந்த அறவழி நிகழ்ச்சியை தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் நடத்துகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TN anti liquor association is planning to send blood to PM Modi on April 19 in support of Delhi farmers agitation.
Please Wait while comments are loading...