தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 12-ந் தேதி வரை நடைபெறும்: சபாநாயகர் தனபால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை கூட்டத் தொடர் வரும் 12-ந் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் 5 நாட்களாக நீடித்து வருகிறது. இது தொடர்பாக நீதிமன்றம் பல்வேறு கருத்துகளை கூறி வருகிறது.

TN Assembly session till Jan 12

ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு தினகரன் வெற்றி பெற்றிருக்கிறார். இரட்டை இலை சின்னம் தொடர்பான தேர்தல் ஆணைய தீர்ப்பில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு 111 எம்.எல்.ஏக்கள்தான் ஆதரவு இருக்கிறது என கூறியிருந்தார்.

இந்த சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் உரையுடன் இன்றைய சபை நடவடிக்கை நிறைவடைந்தது.

இதையடுத்து சபாநாயகர் தனபால் தலைமையில் சட்டசபை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் சபாநாயகர் தனபால் கூறியதாவது:

சட்டசபை கூட்டத் தொடரை வரும் 12-ந் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் 11-ந் தேதி வரை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்குப் 12-ந் தேதி முதல்வர் பதிலளிப்பார்.

இவ்வாறு தனபால் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Tamil Nadu Legislative Assembly Speaker P. Dhanapal said that the session would go on for 4 days.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற