ஜெ. துறைகளை ஏற்ற பின்னர் ஓபிஎஸ் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம்- காவிரி குறித்து ஆலோசனை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஜெயலலிதா வசம் இருந்த துறைகளை ஏற்ற பின்னர் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவிரி விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ந் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவரது வசம் இருந்த துறைகள் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டன.

TN Cabinet meeting begins

இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் துறைகள் தொடர்பான கோப்புகளை பன்னீர்செல்வம் பார்த்து வருகிறார். இந்த நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

சுமார் 1 மணிநேரம் அமைச்சர்களுடன் ஓ. பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் காவிரி பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

முதல்வர் ஜெயலலிதாவின் பொறுப்புகளை ஏற்ற பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The TamilNadu Cabinet meeting began at Secretariat on Wednesday. Finance Minister O Panneerselvam, who has been allocated the portfolios held by ailing Chief Minister Jayalalithaa presided over a meeting.
Please Wait while comments are loading...