உளவுத் துறை, போலீஸ் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உளவுத் துறை மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

இன்று மாலை முதல்வர் அலுவலகத்தில் திடீர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதல்வர் தலைமையில் நடந்த இந்த ஆலோசனையில் டிஜிபி ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்று இருந்தனர்.

TN CM Edappadi Palanisamy meets Police officials

மேலும் இந்த அவரச ஆலோசனையில் உளவுத்துறை ஐ.ஜி. சத்யமூர்த்தியும் பங்கேற்றுள்ளார். இதில் பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டு இருக்கிறது.

ஆர்.கே நகர் தேர்தல் முடிவுகள் அரசுக்கு எதிராக வந்தது. புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருப்பது என பல விஷயங்கள் இதில் விவாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் 12 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வரும் நிலையில் நடக்கும் இந்த கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TN CM Edappadi Palanisamy meets Police officials. CM also meets DGP Rajendran and IG Sathyamoorthi.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X