நடிகர் சிவாஜி பிறந்தநாள்.. சிலைக்கு மரியாதை செலுத்திய துணை முதல்வர் ஓ.பி.எஸ்
நடிகர் சிவாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளார்.
Recommended Video

சென்னை : நடிகர் சிவாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளார்.
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு இன்று 91வது பிறந்தநாள். திரையுலகளில் யோசிக்க முடியாத சாதனைகளை படைத்தவர் நடிகர் சிவாஜி கணேசன்.

இப்போதும் இவர் நடிப்பு பல நடிகர்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இந்த நிலையில் இன்று இவரது பிறந்தநாளுக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர்.
அந்த வகையில், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிவாஜி கணேசனுக்கு மரியாதை செலுத்தினார். அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சென்னை அடையாறில் சிவாஜி மணி மண்டபத்தில் அந்த சிலை உள்ளது. அங்கு உள்ள சிலைக்கு மலர் தூவி ஓ.பன்னீர்செல்வம் சென்று மாலை செலுத்தினார். அவருடன் அமைச்சர்களும் மரியாதை செலுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications