காவிரி மேலாண்மை வாரியம் : நாளை வரைவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுமா ? - விவசாயிகள் எதிர்பார்ப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி : காவிரி நதி நீர் தொடர்பான வழக்கில், நாளை காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வரைவு அறிக்கையை மத்திய அரசு நாளை சமர்பிக்குமா என்று தமிழக விவசாயிகள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு மே 3ம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில், அமைச்சர்கள் மற்றும் பிரதமர்கள் உள்ளிட்டோர் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருப்பதால், திட்ட வரைவுக்கு ஒப்புதல் பெற முடியவில்லை என்று தெரிவித்ததை அடுத்து வழக்கு மே 8ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

TN Farmers says that Central Should Submit Report on Cauvery

மே 8ம் தேதி விசாரணைக்கு வந்த வழக்கில், கர்நாடகத் தேர்தல் நடைபெற இருப்பதால், வழக்கை தள்ளி வைக்க மத்திய அரசு சார்பில் வாதாடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மே 14ம் தேதி திட்ட வரைவு அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் கூறுகையில், கர்நாடகத் தேர்தலை காரணம் காட்டி, காவிரி வாரியம் அமைப்பதை மத்திய பாஜக அரசு தாமதப்படுத்தியது. தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், இனியும் மத்திய அரசு வாரியம் அமைப்பதில் தாமதப்படுத்தில் நியாயம் இல்லை.

எனவே, மத்திய நீர்வளத்துறைச் செயலர் சொல்லியுள்ளபடி, நாளை திட்ட வரைவு அறிக்கையை மத்திய அரசு சமர்பிக்கவேண்டும் என்று தமிழக விவசாயிகள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TN Farmers says that Central Should Submit Report on Cauvery. Earlier, SC adjourned the Case to May 14th due to Karnataka Assembly Elections.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற