For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பண்டிகை தேதி "சண்டே" வந்தா "டேக் இட் ஈஸி"... வெள்ளி, திங்கள் லீவு வருது... ஜாலிதான்!!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: 2016ம் ஆண்டில் தமிழக அரசு அறிவித்துள்ள 9 அரசு விடுமுறை தினங்கள், வெள்ளி மற்றும் திங்கள் கிழமைகளில் வருவதால், அரசு ஊழியர்கள், பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில் தீபாவளி, கிறிஸ்துமஸ், காந்தி ஜெயந்தி, மே தினம், உழவர் திருநாள், திருவள்ளுவர் தினம் ஆகியவை வார விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால் மாணவர்கள் சோகமடைந்துள்ளனர்.

2016ம் ஆண்டுக்கான தமிழக அரசு விடுமுறை நாட்களை தமிழக தலைமைச் செயலர் கு.ஞானதேசிகன் வெளியிட்டுள்ளார்.

TN government announcement pubilc holidays 2016

ஜனவரி 1 - ஆங்கிலப்புத்தாண்டு (வெள்ளிக்கிழமை)

ஜனவரி 15 - பொங்கல் தினம் (வெள்ளிக்கிழமை)

ஜனவரி 16 - திருவள்ளுவர் தினம் (சனிக்கிழமை)

ஜனவரி 17 - உழவர் திருநாள் (ஞாயிற்றுக்கிழமை)

ஜனவரி 26 - குடியரசு தினம் (செவ்வாய்கிழமை)

மார்ச் 25 - புனித வெள்ளி (வெள்ளிக்கிழமை)

ஏப்ரல் 1 - வங்கிகள் கணக்கு முடிப்பு (வணிக-கூட்டுறவு வங்கிகள், வெள்ளிக்கிழமை)

ஏப்ரல் 8 - தெலுங்கு வருடப்பிறப்பு (வெள்ளிக்கிழமை)

ஏப்ரல் 14 - தமிழ்ப்புத்தாண்டு-அம்பேத்கர் பிறந்தநாள் (வியாழக்கிழமை)

ஏப்ரல் 19 - மகாவீரர் ஜெயந்தி (செவ்வாய்கிழமை)

மே 1 - மே தினம் (ஞாயிற்றுக்கிழமை)

ஜூலை 7 - ரம்ஜான் (வியாழக்கிழமை)

ஆகஸ்டு 15 - சுதந்திர தினம் (திங்கட்கிழமை)

ஆகஸ்டு 25 - கிருஷ்ண ஜெயந்தி (வியாழக்கிழமை)

செப்டம்பர் 5 - விநாயகர் சதுர்த்தி (திங்கட்கிழமை)

செப்டம்பர் 13 - பக்ரீத் பண்டிகை (செவ்வாய்கிழமை)

அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி (ஞாயிற்றுக்கிழமை)

அக்டோபர் 10 - ஆயுத பூஜை (திங்கட்கிழமை)

அக்டோபர் 11 - விஜயதசமி (செவ்வாய்கிழமை)

அக்டோபர் 12 - மொகரம் - (புதன்கிழமை)

அக்டோபர் 29 - தீபாவளி பண்டிகை (சனிக்கிழமை)

டிசம்பர் 12 - மிலாதுநபி (திங்கட்கிழமை)

டிசம்பர் 25 - கிறிஸ்துமஸ் (ஞாயிற்றுக்கிழமை)

2016ம் ஆண்டில் மொத்தம் 23 நாட்கள் அரசு விடுமுறை வருகிறது. இதில் அதிகபட்சமாக ஜனவரி மற்றும் அக்டோபரில் 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அலுவலகங்கள், தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வர்த்தக வங்கிகளுக்கும், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு கழகங்கள், வாரியங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அறிவித்துள்ள விடுமுறை அடிப்படையில், ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு, மார்ச் 25ம் தேதி புனிதவெள்ளி, வங்கிக்கணக்கு முடிப்பு நாள் ஏப்ரல் 1ம் தேதி, தெலுங்கு வருடப்பிறப்பு ஏப்ரல் 8ம் தேதி ஆகியவை வெள்ளிக்கிழமையில் வருவதால், தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை இருக்கும்.

அதேபோல், சுதந்திரதினம், விநாயகர் சதுர்த்தி, மிலாடிநபி ஆகியவை திங்கள் கிழமைகளில் வருவதாலும் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும். தீபாவளி, கிறிஸ்துமஸ், காந்தி ஜெயந்தி, மே தினம், உழவர் திருநாள், திருவள்ளுவர் தினம் ஆகியவை வார விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது.

English summary
Tamil Nadu government annouceed 2016 public holidays list.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X