சென்னையில் அடுத்த ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு... ரூ. 75 கோடி நிதி ஒதுக்கீடு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 2019ம் ஆண்டு ஜனவரி 23 மற்றும் 24 தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்காக ரூ. 75 கோடி நிதியை முதல்வர் பழனிசாமி ஒதுக்கீடு செய்துள்ளார்.

வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்கும் விதமாக 2015ம் ஆண்டில் முதல்வராக இருந்த ஜெயலலிதா சென்னையில் பிரம்மாண்டமான உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார். தமிழகத்தில் கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. அப்போது 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீடு தமிழகத்திற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

Tn government announed world investors conference on 2019 January

ஒவ்வொரு ஆண்டும் இதே போன்று உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவில்லை. இதற்கு முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நினைத்த வரவேற்பை பெறவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்நிலையில் 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019ம் ஆண்டு ஜனவர 23, 24 ஆகிய நாட்களில் சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ர. 75 கோடி நிதியை முதல்வர் பழனிசாமி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TN government announced the second world investors conference to be held on 2019 January 23, 24 and for this Rs.75 crores alloted by CM Palanisamy.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற