வணக்கம், புத்தாண்டு வாழ்த்துகள்.. உட்காருங்க.. சட்டசபையைக் கலக்கிய பன்வாரிலாலின் கன்னித் தமிழ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தினகரன் இருக்கை...ஸ்டாலின் வெளிநடப்பு...பரபரப்புடன் தொடங்கிய சட்டசபை கூட்டத்தொடர்- வீடியோ

  சென்னை : சட்டசபையில் இந்த ஆண்டின் முதல் உரையை நிகழ்த்திய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வணக்கம் என்று கூறி தன்னுடைய உரையைத்தொடங்கினார். புத்தாண்டு வாழ்த்துகளையும் தமிழில் தெரிவித்த அவர் ஆளுநர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினரை உட்காருங்கள் என்று தமிழில் கூறினார்.

  தமிழக சட்டசபையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் தமிழக ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமையில் தொடங்கியது. உரையைத் தொடங்கும் முன்னர் அவையில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தமிழில் வணக்கம் கூறினார் ஆளுநர். இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று தமிழிலேயே பேசினார் ஆளுநர் பன்வாரிலால்

  TN governor Banwarilal welcomed the MLAS in assembly with tamil

  இதனையடுத்து ஆளுநர் தன்னுடைய உரையைத் தொடங்குவதற்கு முன்னர் எதிர்க்கட்சியினர் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது நிலைமையை உணர்ந்து அனைவரும் உட்காருங்கள் என்று தமிழிலேயே இரண்டு முறை கூறினார் ஆளுநர். ஆளுநர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினரை அமரச் சொன்னதை அதிமுகவினர் மேஜை மீது தட்டி வரவேற்றனர்.

  தொடர்ந்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், உரையை வாசிக்க விடுமாறும், எதிர்ப்புகளை விவாதத்தின் போது தெரிவிக்கலாம் என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறினார். எனினும் திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீக் உள்ளிட்ட கட்சியினர் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Tamilnadu governor Banwarilal Purohit welcomed the MLAs in Tamil and wished them New year wishes also in tamil, governor also requested the opposition rather raising agitation.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X