மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அனுமதிக்கமாட்டோம்.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: மக்களைப் பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

கதிராமங்கலம், நெடுவாசலில் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். கதிராமங்கலத்தில் போலீசார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தி தாக்கினர்.

TN Govt will not allow any project that could affect people, says Edappadi Palanisamy

இந்த தாக்குதலுக்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தற்போது மத்திய அரசின் ஜிஎஸ்டி மக்களிடத்தில் பெரும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே காஞ்சிபுரம் அருகே பொன்னேரிக்கரையில் இன்று செய்தியாளர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், மக்களைப் பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது. ஜிஎஸ்டி வரியால் தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TamilNadu Chief Minister Edappadi Palanisamy said that his govt will not allow any project that could affect the state people.
Please Wait while comments are loading...