ஜெயா டிவி ஊழியரிடம் பணப்பரிவர்த்தனைகளை ‘அப்டேட்டாக’ கறந்து ஐ.டி.க்கு அனுப்பி வைத்த ஆட்சியாளர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயா டிவி மூத்த ஊழியர் ஒருவரை சில நாட்களுக்கு முன்னரே 'தூக்கி' பணப் பரிவர்த்தனைகளை அப்டேட்டாக வாங்கி வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவுக்கு ஆட்சியாளர்கள் அனுப்பி வைத்ததாகவும் ஒரு தகவல் வலம் வருகிறது.

தினகரன், திவாகரனைவிடவும் விவேக் ஜெயராமன் மீது கொந்தளிப்பில் இருக்கின்றனர் ஆளும் அமைச்சர்கள். தொடக்கத்திலேயே விவேக்கை வளரவிடாமல் செய்திருந்தால், இந்தளவுக்குக் கூட்டத்தைக் காட்டியிருக்க மாட்டார் தினகரன்.

TN Ministers Target Jaya TV's Vivek?

இந்த ரெய்டே விவேக்கைச் சுற்றியுள்ளவர்களை வழிக்குக் கொண்டு வருவதற்குத்தான் என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். சென்னை, ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டி.வி அலுவலகத்துக்குள் இன்று காலை நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள், கணக்கு வழக்குகளை ஆராயத் தொடங்கியுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக, ஜெயா டி.வியில் வேலை பார்த்த சீனியர் ஊழியர் ஒருவரை வழிக்குக் கொண்டு வந்துள்ளனர் ஆட்சியில் உள்ளவர்கள். அவர் மூலமாக அனைத்து பரிவர்த்தனைகளையும் அறிந்து கொண்டவர்கள், ஐ.டி புலனாய்வுப் பிரிவுக்குத் தகவல்களை அளித்துள்ளனர்.

அந்த சீனியர் ஊழியர், இரண்டு நாட்களுக்கு முன்புதான் பணியை ராஜினாமா செய்தார். புதிய திரைப்படங்களை வாங்குவதற்காக, எந்தெந்த வழிககளில் இருந்து பணம் வருகிறது என்பது குறித்த நுண்ணிய தகவல்கள் அனைத்தும் அதிகாரிகளின் கவனத்துக்குச் சென்று சேர்ந்துள்ளது. முருகக் கடவுளின் பெயர் கொண்ட அந்த ஊழியர்தான், தகவல்களைக் கொடுத்துவிட்டார் என சசிகலா தரப்பில் கொதிக்கின்றனர். ஆயிரம் கோடி மதிப்புள்ள ஜாஸ் சினிமாஸ், ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர், கொடநாடு, மிடாஸ் என சசிகலாவுக்குச் சொந்தமான பணப் போக்குவரத்துகளை முற்றிலும் முடக்குவதுதான் ரெய்டின் நோக்கம் என விவரித்த அ.தி.மு.க சீனியர் ஒருவர்,

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sources said that Tamilnadu Ministers were very disappointed over the Jaya TV's MD Vivek Jayaraman.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற