ஆரம்பமே சும்மா ஜில்லு.. வடகிழக்கு பருவமழை நின்று வெளுக்குமா?.. இல்லை "டல்" அடிக்குமா??

Posted By:
Subscribe to Oneindia Tamil
  இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் வானிலை மையம் அறிவிப்பு சென்னை- வீடியோ

  சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த மழை அதிகரிக்குமா அல்லது கடந்த ஆண்டை போல் பொய்த்து போகுமா என்ற கேள்வி அனைவர் மனதலிலும் எழுந்துள்ளது.

  தமிழகத்துக்கு பலன் கொடுப்பது வடகிழக்கு பருவமழையாகும். இதன் காலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையாகும். இந்த காலகட்டங்களில் விவசாய பயிர்கள் நாசமடைவது தொடர்ந்து நடைபெறும். ஆனால் இதனால் உயரும் நிலத்தின் நீர் மட்டமானது கோடை காலத்தில் மக்களுக்கு கைக் கொடுக்கும்.

  கடந்த 2015-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது சென்னையில் கனமழை பெய்ததால் செம்பரம்பாக்கம், அடையாறு, அம்பத்தூர், தாம்பரம் உள்ளிட்ட நீர் நிலைகள் உடைப்பு ஏற்பட்டு அதை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் இரு ஆள்கள் உயரத்துக்கு வெள்ள நீர் தேங்கியது.

   வீணான மழைநீர்

  வீணான மழைநீர்

  சென்னையே மூழ்கும் அளவுக்கு மழை பெய்த போதிலிம் அந்த தண்ணீர் எல்லாம் வீணாக கடலில் சென்று கலந்தது. இதனால் யாருக்கும் எந்தவித பிரயோஜனமும் இல்லாமல் போய்விட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு மழை பொய்த்து போனது.

   பயிர்கள் சேதம்

  பயிர்கள் சேதம்

  கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் விவசாய பயிர்கள் சேதமடைந்தன. இதனால் போட்ட முதலீட்டை எடுக்க முடியாமல் கடனால் தத்தளித்த விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டனர். இவர்களுக்கு வறட்சி நிவாரணமும் ஒன்றும்பாதியுமாக வழங்க அரசு முன்வந்தது.

   வெளுத்து வாங்கும் மழை

  வெளுத்து வாங்கும் மழை

  வடகிழக்கு பருவமழை வரும் 30-ஆம் தேதி முதல் தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று அதிகாலை முதலே தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக கனமழை கொட்டியது. சென்னையில் அதிகாலை முதலே மணிக்கணக்கில் மழை பட்டையை கிளப்பியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

   சாம்பல் கழிவுகளால் ஆபத்து

  சாம்பல் கழிவுகளால் ஆபத்து

  கடந்த ஆண்டு மழை பொய்த்துவிட்டதால் இந்த ஆண்டு நல்ல மழை கிடைக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. இது ஒரு புறம் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் சென்னைவாசிகளுக்கு கிலியை ஏற்படுத்துகிறது. வடசென்னையில் எண்ணூரில் உள்ள வல்லூர் அனல் மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகள் கொசஸ்தலை ஆற்றில் கொட்டப்படுவதால் மழை நீர் செல்ல வழியில்லாமல் வடசென்னைக்கு ஆபத்து ஏற்படும் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

   சென்னைவாசிகள் பீதி

  சென்னைவாசிகள் பீதி

  இதனால் சென்னைவாசிகள் பீதியடைந்துள்ளனர். எனவே இந்த மழை ஆரம்ப நாளிலேயே அசத்தியது போல் வெளுத்து வாங்குமா அல்லது கடந்த ஆண்டு பொய்த்து போனதை போல் புஷ்வானமாகிவிடுமா என்பதை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர். மேலும் நீர் நிலைகள் முறையாக தூர்வாரியிருந்தால் இத்தகைய அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  TN failed to get sufficient rainfall in North East monsoon last year. But this year TN gets severe rainfall in the starting itself. So it is expected that rain will gets severe in coming days.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற