For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேற லெவல்ல வர்றோம்.. இது நெருப்புடா.. ஆட்டைக்கு ரெடியா! #DoubleTheGethu

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தை டிஎன்பிஎல் புயல் இன்று தாக்குகிறது. பிக் பாஸ் புயல் ஏற்கனவே மக்களை கட்டிப் போட்டு வைத்துள்ளதால் இந்தப் போட்டிகளுக்கு எப்படி கூட்டம் வருமோ என்ற பதைபதைப்பு இருந்தாலும் உற்சாகமாக தயாராகி விட்டது இந்த டுவென்டி 20 கிரிக்கெட் லீக்.

சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் வரை ரகளையான ஐபிஎல் போட்டிகளைப் பார்த்து ரசித்த தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு இடையில் கிடைத்த திடீர் பிரசாதமாக வந்து வாய்த்ததுதான் தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள்.

ஐபிஎல் போட்டிகளின் பாணியில், தமிழக அளவில் நடைபெறும் இந்தப் போட்டிகள் கடந்த ஆண்டு முதல் முறையாக நடந்தபோது எதிர்பாராத வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அமைக்கப்பட்டிருந்த அட்டகாசமான மைதானம்தான் டாக் ஆப் தி ஸ்டேட் ஆக மாறியிருந்தது. சர்வதேச தரத்துடன் கூடிய அந்த மைதானம் பெரும் வரவேற்பைப் பெற்று கலக்கியது.

8-3-32

மொத்தம் 8 அணிகள் இப்போட்டித் தொடரில் பங்கேற்கின்றன. சென்னை, திண்டுக்கல் (நத்தம்), நெல்லை ஆகிய 3 நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. மொத்தம் 32 போட்டிகள் நடைபெறவுள்ளன.

நம்ம பயலுக தூத்துக்குடி

கடந்த ஆண்டு நடந்த தொடரில் தூத்துக்குடி அணி தான் சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த முறையும் அது தக்க வைப்பதில் முனைப்பாக உள்ளது. ஆனால் மற்ற அணிகள் இந்த முறை சுதாரித்து பட்டையைக் கிளப்பத் தயாராகி வருகின்றன. நம்ம பயலுக என்ற ஹேஷ்டேக்குடன் பட்டையைக் கிளப்புகிறார்கள் தூத்துக்குடி வீரர்கள்.

பட்டையைக் கிளப்பு கில்லீஸ்

பட்டயக் கிளப்பு என்ற பதாகையுடன் இந்த முறை சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் களம் காண்கிறது கடந்த ஆண்டு ரன்னர் அப் ஆன சேப்பாக் சூப்பர் கில்லிஸ். இந்த அணியின் பஸ்ஸே படு மிரட்டலாக உள்ளது.

வேற லெவல்ல வர்றோம்

வேற லெவல்ல வர்றோம் என்ற முழக்கத்துடன் கோவை கிங்ஸ் அணி இந்த முறை பட்டையைக் கிளப்ப களம் குதிக்கிறது. முழக்கமே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருப்பதால் ரசிகர்களும் குஷியாக காத்திருக்கின்றனர்.

இது நெருப்புடா திண்டுக்கல்

திண்டுக்கல் டிராகன்ஸ் அணி கடந்த தொடரில் சிறப்பாக ஆடியது. இருப்பினும் இறுதிப் போட்டிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. மைதானம் மனதைக் கவர்ந்த அளவுக்கு இந்த அணி கடந்த தொடரில் ரசிகர்களை முழுமையாக வசீகரிக்கவில்லை. இந்தமுறை என்ன செய்யும் என்று பார்ப்போம்.

ஆட்டைக்கு ரெடியாப்பா மதுரை!

மதுரை சூப்பர் ஜெயன்ட் அணியில் பெரிய அளவில் யாரும் இல்லை இருப்பினும் தீப் பொறி பொன்ற இளைஞர் பட்டாளம் நிரம்பியதாக இந்த அணி இருப்பதால் எதிர்பார்ப்புக்கு குறைவில்லே. ஆட்டைக்கு ரெடியா என்று வேறுகேட்கிறார்கள். பார்க்கலாம்.

மோத ரெடியா திருவள்ளூர்

திருவள்ளூர் வீரன்ஸ் அணி மோத ரெடியா என்ற முழக்கத்துடன் களம் குதித்துள்ளது. பாபா அபராஜித்தான் கேப்டன்.

காரைக்குடி காளை

முரட்டுக்காளையாக மாறி சீற வருகிறது காரைக்குடி காளை. அனுபவஸ்தர்களுடன் 14 வயது இளம் வீரரும் இதில் இடம் பெற்றிருப்பது சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ளது.

பக்கா மாசுடா!

பக்கா மாசுடா என்ற வேகத்துடன் களம் காண்கிறது ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி.

இன்று முதல்

இன்று தொடங்கி ஆகஸ்ட் 20ம் தேதி வரை டிஎன்பிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளன. கடந்த தொடரை விட இந்த முறை எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதால் ரசிகர்களைப் போலவே வீரர்களும் கூட உற்சாகமாக காத்துள்ளனர்.

English summary
Fans and the teams are gearing up for the season two of the famous TNPL 2017 today. 8 teams are participating in the event which will have 32 matches.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X