For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜ்யசபா தேர்தல்: அதிமுக வேட்பாளராக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நவநீதகிருஷ்ணன் அறிவிப்பு!

By Mathi
Google Oneindia Tamil News

navaneethakrishnan
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கான இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞரும் தற்போதைய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) தலைவருமான ஏ. நவநீதகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரு இடத்துக்கான ராஜ்யசபா இடைத் தேர்தல் ஜூலை 3ந் தேதி நடைபெறுகிறது. அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த செல்வகணபதி, தற்போது தி.மு.கவில் உள்ளார். இவர் 2010ம் ஆண்டு திமுக சார்பில் ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் அவர் அமைச்சராக இருந்தபோது சுடுகாட்டுக்கு கூரை அமைப்பதில் ஊழல் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் செல்வகணபதிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

இதனால் அவர் தன் ராஜ்யசபா எம்.பி பதவியை கடந்த ஏப்ரல் 18ந் தேதி ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து அப் பதவிக்கு ஜுலை 3-ல் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான நிலையில் நேற்று நள்ளிரவில் அதிமுக வேட்பாளராக நவநீதகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

1981 ஆம் ஆண்டு முதல் வழக்கறிஞராக பணியாற்றிய நவநீதகிருஷ்ணன் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராகவும் செயல்பட்டு வந்துள்ளார். தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நவநீதகிருஷ்ணன் செயல்பட்டு வருகிறார்.

English summary
Within a few hours after the Election Commission announced by-election for a Rajya Sabha seat in Tamil Nadu, Chief Minister and AIADMK general secretary J Jayalalithaa announced A Navaneethakrishnan, Chairman of the Tamil Nadu Public Service Commission as the party's candidate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X