For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுங்கச்சாவடிகளில் ரவுடிகள் மூலமே கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.. நீதிபதிகள் கடும் கண்டனம்!

தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ரவுடிகள் மூலமே கட்டணம் வசூல் செய்யப்படுவதாக மதுரை ஹைகோர்ட் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

மதுரை: தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ரவுடிகள் மூலமே கட்டணம் வசூல் செய்யப்படுவதாக மதுரை ஹைகோர்ட் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதாக மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த பழனிகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

Toll gates employees are working like goons: Chennai High court madurai bench

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுங்கச்சாவடிகள் முறையாக செயல்படவில்லை என குற்றம்சாட்டினர். சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காக்க வைக்கப்படுவதாகவும் ஆம்புலன்ஸ்கள் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டிருப்பதை தாங்களே பார்த்திருப்பதாகவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

சுங்கச்சாவடி விதிமீறலில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திற்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சுங்கச்சாவடிகளில் ரவுடிகள், சமூகவிரோதிகள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் குற்றம்சாட்டினர்.

Toll gates employees are working like goons: Chennai High court madurai bench

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடி ஊழியர்கள் ரவுடிகளை போல் செயல்படுகின்றனர் என்றும் நீதிபதிகள் குற்றம்சாட்டினர். மேலும் சுங்கச்சாவடிகள் சமூக விரோதிகள் மூலமே கட்டணம் வசூலிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

English summary
Chennai High court madurai bench says that Toll plaza employees are working like goons. Tollgates are not working properly high court madurai bench judges said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X