ஹெலிகாப்டரில் செல்லும் பிரதமருக்காக சாலையில் நிறுத்தப்பட்ட வாகனங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மோடிக்கு எதிர்ப்பு..விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் போராட்டம்- வீடியோ

  சென்னை: பிரதமர் மோடி சென்னை வந்துள்ளதை அடுத்து சென்னை சாலைகள் முழுக்க பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மோடி ஹெலிகாப்டரில் செல்ல இருக்கும் நிலையில் கூட போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

  சென்னையில் நடக்கும் ''டிஃபேஎக்ஸ்போ 2018'' எனப்படும் ராணுவ மற்றும் தொழில்நுட்ப கருத்தரங்கில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். நேற்று தொடங்கிய இந்த கருத்தரங்கு 14ம் தேதி வரை நடைபெறும்.

  இதனால் தற்போது சென்னை விமான நிலையத்திற்கு மோடி வந்துள்ளார். மோடியை தமிழக அரசும், பாஜக கட்சி உறுப்பினர்களும் வரவேற்றுள்ளனர்.

  எதிர்ப்பு

  எதிர்ப்பு

  பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து மக்கள் போராடி வருகிறார்கள். காவிரி மேலாண்மை வாரிய பிரச்சனை தொடங்கி பல விஷயங்களில் மத்திய அரசு தமிழக மக்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக கூறி மோடியின் வருகைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னையில் இதனால் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

  கார் இல்லை

  கார் இல்லை

  இதனால் மோடியின் பாதுகாப்பு கருதி அவரது பயணத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மோடி சென்னையில் எங்குமே காரில் செல்ல மாட்டார். ஹெலிகாப்டரில் மட்டுமே மோடி சென்னை முழுக்க வலம்வர இருக்கிறார். போராட்டம் வலுவானதை அடுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

  சாலையில் ஏன்

  ஆனால் மோடி ஹெலிகாப்டரில் போனாலும் கூட சென்னையில் கிண்டி போன்ற பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அவர் செல்ல இருக்கும் ஐஐடி சாலையிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது. ஹெலிகாப்டரில் பிரதமர் செல்லும் போது சாலையில் வாகனங்களை திருப்பி விடுவது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

  போராட்டம் செய்யும் மக்கள்

  அதே சமயம் போராட்டம் செய்யும் மக்களும் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியுள்ளனர். சில இடங்களில் இதனால் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளது. இதனால் தற்போது சென்னை மெட்ரோவில் பயணிகளின் எண்ணிக்கை திடீர் என்று அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Traffic breaks the city amidst Modi's visit to Chennai in Helicopter. He is visiting Tamilnadu for Defence expo.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற