அரசு பள்ளிகளின் தரம் உயர்த்த கொடைக்கானலில் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொடைக்கானல்: தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான ஒரு மாத சான்றிதழ் பயிற்சி கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக கல்வியியல் துறையில் நடைபெறுகிறது.

டெல்லி தேசிய கல்வியியல் மற்றும் திட்டமிடல் பல்கலைக்கழகம் மற்றும் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் ஒருங்கிணைந்து தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சியை அளிக்கிறது.

இப்பயிற்சி கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறையால்
நடத்தப்படுகிறது. இப்பயிற்சிக்குத் தமிழகத்தில் பணிபுரியும் 30 அரசு பள்ளித் தலைமையாசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள்

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள்

தேர்வு செய்யப்பட்டுள்ள தலைமையாசிரியர்களில் 15 பேர் நடுநிநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள். 15 பேர் அரசு
உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்.

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்

தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான ஒரு மாத சான்றிதழ் பயிற்சி கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக கல்வியியல் துறையில் நடைபெறுகிறது.

தலைமை ஆசிரியர்கள்

தலைமை ஆசிரியர்கள்

இப்பயிற்சியின் துவக்க விழா பல்கலைகழக துணைவேந்தர் முனைவர் வள்ளி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் சுகந்தி அவர்கள் முன்னிலை வகித்தார்.
கல்வியியல் துறைத்தலைவர் மற்றும் இப்பயிற்சி திட்டத்தின் இயக்குநர் முனைவர். பிந்து அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

பள்ளிகளின் தரம் உயரும்

பள்ளிகளின் தரம் உயரும்

பல்கலைகழக கல்வியியல் துறைப் பேராசிரியர்கள் முனைவர். பிளஸ்சிங் மேரி, முனைவர்.ரஞ்சனி, முனைவர் பென்சி மற்றும் முனைவர். ரேணுகாதேவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். துணைவேந்தர் அவர்கள் தனது தலைமை உரையில் அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் நோக்கில் இப்பயிற்சி நடத்தப்படுகிறது என்றார்.

கல்வி தரம் உயர்த்தும் பயிற்சி

கல்வி தரம் உயர்த்தும் பயிற்சி

இப்பயிற்சி ஒரு மாதம் உண்டு உறைவிடப் பயிற்சியாக நடைபெற உள்ளது எனவும் டெல்லி தேசிய கல்வியியல் மற்றும் திட்டமிடல் பல்கலைக்கழகத்திலிருந்தும் கருத்தாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளிக்க உள்ளதாகவும் பயிற்சியின் திட்ட இயக்குநர் முனைவர்.பிந்து அவர்கள் தெரிவித்தார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளைத் திட்ட ஆலோசகர்கள் திருமதி.கார்த்திகைச் செல்வி மற்றும் திருமதி பிளாசம் ஆகியோர் செய்திருந்தனர். பயிற்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்.ரீனா ரூபி அவர்கள் நன்றி கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Mother Teresa Women's University is giving one month certificate trainig for government School headmasters. 30 schools headmasters has been participating the training programe.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற