கற்பித்தலில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது எப்படி.. ஆசிரியர்களுக்கு பயிற்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் மூலம் ஐந்து நாட்கள் காரைக்குடியில் உள்ள செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளியில் பயிற்சி அளிக்கக்க்ப்பட்டது.

இப்பயிற்சியின் துவக்க விழாவிற்கு அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டஉதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் திருஞானம் தலைமையில், செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி முதல்வர் சிவகுமார் முன்னிலையில் நடைபெற்றது. பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பீட்டர்ராஜா அனைவரையும் வரவேற்றார். இப்பயிற்சியில் மாற்று திறன் குழந்தைகளின் வகைப்பாடுகள் அவர்களை கையாளும் விதங்கள் குறித்து இரு நாட்கள் பயிற்சியளிக்கப்பட்டது.

Training session for science teachers

பாலின சமநிலை குறித்து ஒரு நாள் பயிற்சியளிக்கப்பட்டது. கற்பித்தலில் தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்துதல் குறித்து செந்தில்செல்வன் மற்றும் முருகன் ஆகியோர் பயிற்சியளித்தனர்.

Training session for science teachers

இப்பயிற்சியில் 142 அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சியின் நிறைவு விழா அன்று மாலை செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி முதல்வர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பீட்டர் ராஜா முன்னிலை வகித்தார்.

Training session for science teachers

தேவகோட்டை கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் அனைவரையும் வரவேற்றார். செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி உதவி முதல்வர் அருள் பிரபாகர் வாழ்த்துரை வழங்கினார். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பீட்டர் ராஜா நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை அருள் பிரபாகர் சிறப்பாக செய்திருந்தார்.

Training session for science teachers

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A training camp was organised for science teachers in Devakottai. Various teachers from Devakottai circle attended the same and got training for 2 days.
Please Wait while comments are loading...