உஷா உயிரிழப்புக்கு காரணமான காவல் ஆய்வாளர் திருச்சி சிறை மருத்துவமனையில் அனுமதி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  2 உசுரு பலி, இது தான் தமிழக அரசின் மகளிர் தின பரிசு..!!

  திருச்சி: உஷா உயிரிழப்புக்கு காரணமான காவல் ஆய்வாளர் திருச்சி சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  திருச்சி திருவெறும்பூர் பெல் ரவுண்டானா அருகே ஹெல்மட் அணியாமல் சென்ற தம்பதியின் இருசக்கர வாகனத்தை காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்தார். இதில் தம்பதிகள் ராஜா - உஷா நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர்.

  Transport inspector Kamaraj admitted in the jail hospital

  இந்த விபத்தில் மூன்று மாத கர்ப்பிணியான உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

  இந்த சம்பவத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறி சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  நேற்று முன்தினம் இரவு உஷா உயிரிழந்ததை தொடர்ந்து மக்கள் விரட்டியதில் கீழே விழுந்த காமராஜ்க்கு தலையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காயத்துக்கு சிகிச்சைப் பெற திருச்சி சிறை மருத்துவமனையில் காமராஜ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Transport inspector Kamaraj has been admitted in the jail hospital. Kamaraj kicked two wheeler in this incident pragnant lady Usha dies on Wednessday night.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற