கரூர் நகரத்தை சுற்றிச் சுற்றி வந்த அமைச்சர்... ஏன்? - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் நகரில் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க, நகரை வலம் வந்து அதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார்.

அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டர். அப்போது கரூர் நகர்ப்பகுதியில் அதிகாரிகளுடன் வலம் வந்தார். அப்போது கரூர் நகரத்தில் மாலை நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டாவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

அதனையடுத்து போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், கரூரில் உள்ள பேருந்து நிலையத்தை மாற்றியமைக்க தற்போது நகராட்சியிடம் போதிய நிதி இல்லை. அரசு நிதியளித்த பிறகு பேருந்து நிலையம் மாற்றியமைக்கப்படும் என தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Transport minister M.R.Vijayabaskar visited karur and consulted with officials regarding controlling traffic in Karur.
Please Wait while comments are loading...