இந்தியா உருவாகும் முன்பே தோன்றியது முத்தலாக் வழக்கம்.. - சீமான் பேச்சு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  முத்தலாக் சட்டத்தை தடை செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை- சீமான்- வீடியோ

  திருவள்ளூர்: ஒரு ஆணும் பெண்ணும் மனம் ஒத்துப்போய் பிரிவதற்கு உரிமை உள்ளது என்று கூறிய சீமான், இந்தியா தோன்றுவதற்கு முன்பு தோன்றிய முத்தலாக் வழக்கத்திற்கு தடை விதிப்பதற்கு மத்திய அரசுக்கு என் அதிகாரம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

  திருவள்ளூர் மாவட்டம் இஸ்லாமிய அமைப்புகள் சார்பாக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்தியா பல்வேறு மொழி, கலாச்சாரம், மதங்களைக்கொண்ட மக்கள் வாழும் நாடு என்றும், அந்த மக்களின் அடையாளங்களை அழிக்க நினைத்தால், நாட்டின் இறையாண்மை கேள்விக்குறியாகி விடும் என்றார்.

  Triple Talaq is the law which formed before India s formation says Seeman

  மேலும் பேசிய அவர், நபிகள் வகுத்த வழியில் இஸ்லாமியர்கள் தங்கள் சட்டத்திட்டங்களை மதித்து நடப்பதாக கூறிய அவர், இந்தியா உருவாவதற்கு முன்பே இந்த இஸ்லாமிய சட்டங்கள் உருவாகி விட்டதாக கூறினார். இங்கு ஒரே தடவையில் மூன்றுமுறை எந்த இஸ்லாமியரும் தலாக் சொல்வதில்லை என்று கூறிய அவர், இந்திய சட்டம் அளிப்பதை போல இஸ்லாமிய சட்டத்திலும் விவகாரத்து செய்ய கால அவகாசம் அளிக்கப்படுவதாக கூறினார்.

  மேலும் ஷரிஅத் சட்டமும், நாட்டின் சட்டத்தைப் போல இருக்கும் போது எதற்காக முத்தலாக்கிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் கேள்விஎழுப்பினார். மூன்று ஆண்டு சிறை தண்டனை பெற்ற ஒரு ஆண் எவ்வாறு அதற்கு காரணமான பெண்ணுடன் சேர்ந்து வாழுவான் என்ற கேள்வியை முன்வைத்த சீமான் இந்த தடை சட்டம் தேவையற்றது என்றார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Triple Talaq is the law which formed before India s formation says Seeman. He spoke this in a protest organized by the Muslim community in Thiruvallur. And also he said that a Man and women has rights to get divorce .

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற