ஆட்சியில் ஆளுநர் தலையீடு.. பழனிச்சாமியுடன் பாஜகவையும் சேர்த்து சாடும் டிடிவி தினகரன்! காரணம் என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது ஏன்?- வீடியோ

  சென்னை: ஆட்சி அதிகாரத்தில் தமிழக ஆளுநர் தலையிடுவதற்கு அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் அதிருப்தி தெரிவித்துள்ளார். வழக்கமாக மாநில அரசை மட்டுமே சாடி வந்த அவர் இப்போது மத்திய அரசையும் சேர்த்து சாடியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

  இதுகுறித்து அவர் வெளியிட்ட டிவிட்டுகள்:

  தமிழக ஆளுனரின் ஆய்வு மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளது. மக்கள் விரோத பழனிச்சாமி அரசு வீட்டுக்குப் போக வேண்டும் என்பது தமிழக மக்களின் ஒட்டுமொத்த விருப்பம். அதற்கான முன்னோட்டமாகத்தான் இதைப் பார்க்க வேண்டி இருக்கிறது.

  புதுச்சேரி மற்றும் டெல்லியில் துணைநிலை ஆளுனர்களின் தலையீட்டால் எப்படி நிர்வாகம் ஸ்தம்பித்திருக்கிறதோ அதே நிலை தமிழகத்திற்கும் வரலாம். அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக அரசு அதிகாரத்தில் ஊடுறுவும் பி.ஜே.பி.யின் பாணி இது போலும்!

  தமிழகத்தில் இப்போது நடப்பது இதயதெய்வம் அம்மாவின் ஆட்சி அல்ல என்பதை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது. அம்மா ஒருபோதும் இதுபோன்ற ஆய்வுகளை அனுமதிக்க மாட்டார். மாநில சுயாட்சியை எல்லா நிலைகளிலும் உறுதிப்படுத்துவதே அ.தி.மு.க.வின் கொள்கை.

  முதல்வர் பழனிச்சாமியின் அரசு, தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக, மாநிலத்தின் நலன்களை அடகு வைக்க துளியும் தயங்காது என்பதையே ஆளுனரின் ஆய்வு உணர்த்துகிறது. நீட் தேர்வு முதல், தொடர்ந்து தமிழகத்தின் நலன்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன.

  இதுபோன்ற ஆய்வுகள் வரவேற்கப்பட வேண்டியது என்று அமைச்சர்கள் சொல்வது வெட்கக்கேடானது. இதற்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய முதல்வர் பழனிச்சாமி தனது சுயநலத்தில் மட்டுமே கவனமாக இருக்கிறார்!

  இவ்வாறு டிவிட்டுகளில் கூறியுள்ளார். இதுவரை எடப்பாடி பழனிச்சாமியை மட்டுமே விமர்சனம் செய்து வந்தார் தினகரன். இப்போது பாஜகவையும் சேர்த்தே விமர்சனம் செய்கிறார். ஐடி ரெய்டுகாரணமாகவே தினகரன், பாஜகவை விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  TTV Dhinakaran slam Tamilnadu government over governor interruption in the governance.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற