ஆர்.கே.நகரில் ஒரு ஓட்டுக்கு 5000 ரூபாய் வீதம் பணப்பட்டுவாடா செய்தார் டிடிவி தினகரன்.. சரவணன் எம்எல்ஏ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் தரப்பு ஒரு ஓட்டுக்கு ரூ4000 முதல் ரூ5000 வரை வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சரவணன் எம்.எல்.ஏ. பேசியுள்ளதாக டைம்ஸ் நவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கியதன் அடிப்படையில் தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

 ttv dinakaran given 5000 rs for voters in r.k.nagar by poll, says saravanan mla

இந்நிலையில் மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் பேசியுள்ளதாக வீடியோ ஒன்றை இன்று டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ளது. அதில் அவர் கூறியுள்ளதாக டைம்ஸ் நவ் தரப்பில் தெரிவித்துள்ளதாவது: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஒரு ஓட்டுக்கு ரூ4000 முதல் ரூ5000 வரை தினகரன் தரப்பு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது.

அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் வட்டச் செயலாளர்கள் மூலம் பணப்பட்டுவாடா நடைபெற்றது. காவல் துறையின் ஒத்துழைப்போடு தான் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்களின் மனநிலை தினகரனுக்கு எதிராக இருந்தது. ஓபிஎஸ் தரப்பு பணம் கொடுக்கவில்லை. 15 நாட்களுக்குள் இடைத்தேர்தல் கண்டிப்பாக ரத்து செய்யப்படும் என டெல்லியில் இருந்து தகவல் வந்துள்ளதாக சரவணன் கூறியதாக டைம்ஸ் நவ் தனது டுவிட்டுகளில் தெரிவித்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ttv dinakaran group distributed rs 5000 for voters in r.k.nagar by poll, says saravanan mla
Please Wait while comments are loading...