ஹவாலா முறையில் பணத்தை வாரியிரைத்து தினகரன் வெற்றி பெற்றுள்ளார்.. எடப்பாடியார் சரமாரி குற்றச்சாட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை: ஹவாலா முறையில் பணத்தை வாரியிரைத்து டிடிவி தினகரன் வெற்றி பெற்றுள்ளார் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டிடிவி தினகரனை சரமாரியாக சாடினார். டிடிவி தினகரன் ஆர்கே நகரில் ஹவாலா முறையில் பணத்தை வாரியிரைத்து வெற்றி பெற்றதாக அவர் குற்றம்சாட்டினார்.

திமுகவுடன் ரகசிய கூட்டணி

திமுகவுடன் ரகசிய கூட்டணி

திமுகவுடன் ரகசிய கூட்டணி வைத்து தினகரன் வெற்றி பெற்றுள்ளார் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார். மேலும் மோசடி வழியில் பெற்ற தினகரனின் வெற்றி நீடிக்காது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

ஏமாற்றி கொள்ளையடித்த கும்பல்

ஏமாற்றி கொள்ளையடித்த கும்பல்

எம்ஜிஆர், ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட கட்சியை ஏமாற்றி கொள்ளையடித்த கும்பலால் ஒரு போதும் கைப்பற்ற முடியாது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

கட்சியை கைப்பற்ற முடியவில்லை

கட்சியை கைப்பற்ற முடியவில்லை

மேலும் தாமரைக்கனி சுயேச்சையாக வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அவரால் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

ஒன்றும் செய்ய முடியாது

ஒன்றும் செய்ய முடியாது

முன்னதாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆயிரம் தினகரன் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chief minister Edappadi palanisami says TTV Dinakaran won in RK Nagar with the seret alliance of DMK. TTV Dinakaran got victory in RK Nagar in hawala method.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற