"மொட்டை மாடி கல்பனா" ரேஞ்சுக்கு தினகரனை கலாய்த்த கே.பி.முனுசாமி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டிடிவி தினகரன் என்பவர் அதிமுகவிலேயே இல்லை என்று முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி தெரிவித்தார்.

அதிமுக இணைப்பு குறித்து தினகரன் அறிவிப்பு தொடர்பாக தங்கள் கழக நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது டெங்கு காய்ச்சலை தடுக்கத் தவறியது, நீட் தேர்வுக்கு விலக்கு பெறாதது, குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணாதது, தமிழக அரசில் நடைபெறும் ஊழல்கள் ஆகிய தமிழக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து வரும் 10-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

TTV Dinakaran is not in ADMK, says K.P.Munusamy

இதுகுறித்து முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவருமான கேபி முனுசாமி கூறுகையில், தினகரன் நிர்வாகிகளை நியமித்ததால் எந்த குழப்பமும் இல்லை. எங்களை பொருத்தவரை தினகரன் அதிமுகவிலேயே இல்லை.

அவர் ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்டவர். விஜயபாஸ்கர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும். அமைச்சர் விஜயபாஸ்கர் தானாகவே பதவியை ராஜினாமா செய்வது கட்சிக்கும், ஆட்சிக்கும் நல்லது என்றார் அவர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
KP Munusamy says that there is no confusion of TTV Dinakaran's appointment. According to us, he does not belongs to ADMK.
Please Wait while comments are loading...