அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தைக் கூட்ட தினகரனுக்கு அதிகாரமில்லை.. அமைச்சர் ஜெயக்குமார் பொளேர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்ட தினகரனுக்கு எந்த அதிகாரமும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தலைமை நிலைய செயலாளர்தான் எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டலாம் என்றும் அவ்ர கூறியுள்ளார்.

சசிகலா குடும்பத்தை ஒட்டுமொத்தமாக கட்சியிலிருந்து நீக்குவதாக அமைச்சர்கள் ஜெயகுமார், சிவி.சண்முகம் உள்ளிட்டோர் தெரிவித்தனர். டிடிவி.தினகரனால் கட்சிக்கும் ஆட்சிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

கட்சி மற்றும் ஆட்சி அதிகாரத்தில் சசிகலா குடும்பத்தின் தலையீடு எள்ளளவும் இருக்கக்கூடாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் கட்சியில் தனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை கூட்டம்

இன்று மாலை கூட்டம்

இன்று மாலை எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெறும் என டிடிவி.தினகரன் தரப்பு அறிவித்துள்ளது.

எந்த அதிகாரமும் இல்லை

எந்த அதிகாரமும் இல்லை

இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்ட தினகரனுக்கு எந்த அதிகாரமும் இல்லை என நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை தலைமை நிலைய செயலாளர்தான் கூட்டலாம் என அவர் கூறியுள்ளார்.

கூட்டத்தை கூட்ட முடியாது

கூட்டத்தை கூட்ட முடியாது

கட்சியில் எந்த அதிகாரத்திலும் இல்லாத ஒரு நபர் எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்ட முடியாது என்றும் அவர் கூறினார். டிடிவி தினகரனுக்கு பெரும்பாலான எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இன்று மாலை நடைபெறும் எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அவருக்கான ஆதரவு மக்கள் மத்தியில் எப்படி உள்ளது என தெரியவரும்.

என்ன முடிவை அறிப்பார்?

என்ன முடிவை அறிப்பார்?

அதேநேரத்தில கட்சியிலிருந்து ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் டிடிவி தினகரன் எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டுவதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கூட்டத்தின் முடிவில் டிடிவி.தினகரன் என்ன மாதிரியான முடிவை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran not having any rights to conduct MLAs meet says finance minister Jayakumar. Cheif secretary only has the rights to held MLAs meeting.
Please Wait while comments are loading...