சைரன் பொருந்திய காரில் மாணவியை அமரவைத்து உத்வேகத்தை தூண்டிய தி.மலை ஆட்சியர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

செய்யாறு: செய்யாறு அரசு பள்ளி மாணவியின் ஆட்சியர் ஆகும் ஆசையை ஊக்கப்படுத்துவதற்காக அவரை தனது சைரன் பொருத்திய காரில் திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி அமரவைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் செய்யாறு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி மோனிஷா 10-ஆம் வகுப்பில் 500-க்கு 491 மதிப்பெண்கள் வாங்கியமைக்கு அவருக்கு நல திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வழங்கினார்.

TV Malai collector fulfills Government school student's dream

அப்போது அந்த மாணவி அவரிடம் எனக்கும் உங்களை போல் ஆட்சியராக வேண்டும் என்ற லட்சியம் உண்டு என்றார். அதற்கு ஆட்சியர் கந்தசாமியோ வாழ்த்துகள் கூறிவிட்டு அவரை உடனடியாக அவரது சைரன் பொருத்திய கார் அருகே அழைத்து சென்றார்.

அப்போது அந்த காரில் அவர் அமரும் இருக்கையில் அந்த மாணவியை உட்காரவைத்தார். பின்னர் புகைப்படம் எடுக்க சொன்னார். மாணவியிடம் அந்த புகைப்படத்தை கொடுத்தார்.

அப்போது அவர் கூறுகையில் இந்த புகைப்படத்தை நீ பார்க்கும்போது ஆட்சியராக வேண்டும் என்ற உத்வேகம் உனக்குள் பிறக்க வேண்டும். இதுபோல் ஒவ்வொரு முறையும் இந்த புகைப்படத்தை பார்க்கும்போது ஆட்சியர் ஆக வேண்டும் என்ற வெறி ஏற்பட்டு அது உனது லட்சியத்தை நிறைவேற்ற உந்து சக்தியாக இருக்கும்.

நானும் உன்னை போல் அரசு பள்ளியில் படித்துவிட்டுதான் ஆட்சியராகிவுள்ளேன் என்று கூறி அந்த மாணவியை ஊக்கப்படுத்தினார். இதனால் ஆசிரியர்கள், மாணவிகளும், நெகிழ்ச்சி அடைந்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Cheyyar Government school girl student says to Tiruvannamalai collector Kandasamy that she wants to become a collector like him. He suddenly take the girl to syron attached car and make her sit in his seat and took photograph. He also advised the girl to see this photo to get the inspiration.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற