“அரசு விழாவில் நயினார் நாகேந்திரனுக்கு இடம் கொடுத்தது தவறு” - அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார்

Subscribe to Oneindia Tamil

மதுரை: பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சி மேடையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அமர வைக்கப்பட்டது தவறான முன்னுதாரணம் என தவெக அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, சென்னை பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில், சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத் திட்டங்கள் அடிக்கல் நாட்டுதல், முடிந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தல் உள்ளிட்டவற்றை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிக்காக நேற்று (அக்டோபர் 11) சென்னை வருகை தந்தார்.

TVK Minister CTR Nirmal Kumar Criticises Nainar Nagendran s Seating on Dais at PM Modi Event

சென்னை போரூர் பைபாஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பிற்பகலில் கிண்டி வித்யாலயா மைதானத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில், பங்கேற்று சுமார் ரூ. 13 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியுடன், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகர், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், அமைச்சர் என். ஆனந்த், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எம்.பி., எம்.எல்.ஏ உள்பட எந்த அரசுப் பொறுப்பிலும் இல்லாத நயினார் நாகேந்திரன், பிரதமர் மோடி பங்கேற்ற அரசு விழாவில் மேடையில் அமர்ந்திருந்தது விவாதப்பொருளாகி உள்ளது. காங்கிரஸ் மாநில தலைவரும், எம்.பியுமான மாணிக்கம் தாகூர், இது என்ன புரோட்டோகால் எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், "பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டிற்கு வருகை தந்து பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளார். தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்கள் தொடர்பாகவும், கோயம்புத்தூர், மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் முதலமைச்சர் விஜய், பிரதமரிடம் முன்வைத்துள்ளார்.

இத்தகைய அரசு நிகழ்ச்சிகளில் கட்சியை சார்ந்தவர்களை மேடையில் அமர வைப்பது எந்த வகையான நடைமுறை என்று தெரியவில்லை. எந்த புரோட்டோகாலில் நயினார் நாகேந்திரன் அமர வைக்கப்பட்டார் எனத் தெரியவில்லை. அரசு நிகழ்ச்சிகளில் எம்எல்ஏ, எம்.பி போன்ற மக்கள் பிரதிநிதிகள் அல்லாதவர்களுக்கு இடமளிப்பதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும். எங்கள் கட்சி நிர்வாகிகளைக் கூட அரசுப் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளோம்.

அப்படி இருக்கும்போது, எந்தவொரு மக்கள் பிரதிநிதிப் பதவியிலும் இல்லாத பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை அரசு நிகழ்ச்சியில் அமர வைத்திருப்பது தவறான மிக மோசமான முன்னுதாரணம். அரசு விழாவில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு இடம் கொடுத்ததற்கு தவெக எதிர்ப்பு தெரிவிக்கிறது. கட்சிக்காரர்களை புரொமோட் செய்ய அரசு நிகழ்ச்சிகளை பயன்படுத்தக்கூடாது. இதுபோன்ற நடைமுறைகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+