For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அண்ணாத்தே.. 'கோ பாக்' னா இன்னா தெர்யுமா....?

Google Oneindia Tamil News

சென்னை: சிங்காரச் சென்னையின் பல பெயர்கள் மக்களுக்கு நல்ல பரிச்சயம்தான். ஆனால் அதற்கான அர்த்தம் எத்தனை சென்னைவாசிகளுக்குத் தெரியும்? காரணம் பல பெயர்கள் எப்போது வந்தது என்பதே தெரியாது.

சென்னையின் ஒவ்வொரு பகுதியையும் பல காலமாக சுற்றிச் சுற்றி வந்தவர்களாக இருந்தாலும் கூட டக்கென்று அவர்களை ஒரு இடத்தில் நிறுத்த இந்த பெயருக்கு என்ன அர்த்தம் என்று கேட்டால் கட்டாயம் விழிப்பார்கள்.

அப்படிப்பட்ட சென்னை நகரின் புராதனப் பெயர்கள் குறித்த அலசல் இது.....

அமைந்தகரை...

அமைந்தகரை...

இந்தப் பெயரை இப்போது பலரும் அமிஞ்சிக்கரை என்றுதான் கூப்பிடுகிறார்கள். காரணம் வெள்ளையர்கள் அப்படிக் கூப்பிட்டதால். அமைந்தகரை என்பதற்கு அர்த்தம், ஆற்று வெள்ளம் வந்து வடிந்து நிற்கும் பகுதி என்பதாகும்.

சேப்பாக்கம்....

சேப்பாக்கம்....

நிறையப் பேருக்கு இது தெரியும். ஆனால் இதன் அர்த்தம் தெரியுமா என்றால் தெரிய வாய்ப்பில்லை. சேப பாக் என்பதுதான் இதன் உண்மையான பெயர். அப்படி என்றால், ஆறு தோட்டங்கள் என்று இந்தியில் அர்த்தமாம்.

திருவல்லிக்கேணி...

திருவல்லிக்கேணி...

திருவல்லிக்கேணி என்றால் திருவல்லி கேணி என்று அர்த்தம். அதாவது முருகனின் மனைவியான வள்ளியின் பெயரால் அமைந்த கிணறு என்று அர்த்தமாம்.

கோடம்பாக்கம்...

கோடம்பாக்கம்...

அதேபோலத்தான் கோடம்பாக்கம். அதாவது கோட பாக் என்று அர்த்தம். குதிரைகள் நிறுத்தப்பட்டும் லாயம் உள்ள பகுதி என்று இதற்குப் பொருள்.

திருவால்மியூர்....

திருவால்மியூர்....

வால்மீகி பிறந்த ஊர்தான் திருவால்மிகியூர் என்று மாறி இன்று திருவான்மியூர் என்று திரிந்து போய் நிற்கிறது.

கொலைகாரன் பேட்டை...

கொலைகாரன் பேட்டை...

சரி கொலைகாரன் பேட்டைக்கு என்ன அர்த்தம் தெரியுமா. கொலை நடந்த பகுதி என்று அர்த்தம் அல்ல. மாறாக, அதாவது கொள்ளைகள் நிறைந்த பகுதி என்பதுதான் பின்னர் கொலைகாரன் என்று மாறி விட்டதாம். கொள்ளை என்றால் திருட்டு அல்ல, தோட்டத்தைத்தான் சுத்தத் தமிழில் கொள்ளை என்று கூறுவார்கள். இது அந்தக் கொள்ளை. கொள்ளைப்புறம் என்று சொல்வோம் அல்லவா.. அந்தக் கொள்ளை.

சேத்துப்பட்டு....

சேத்துப்பட்டு....

செட்டி பேட்டைதான் மருவி சேத்துப்பட்டு என்றாகி விட்டது. செட்டியார் சமூகத்தினர் அதிகம் வாழ்ந்த பகுதிதான் செட்டிப்பேட்டை.

கொசப்பேட்டை....

கொசப்பேட்டை....

இப்படித்தான் குயவன் பேட்டை பின்னர் கொசப்பேட்டையாக மாறியது. இப்படி சென்னை முழுவதும் தற்போது உள்ள பெயர்களுக்கு உண்மையான வேறு பெயர்கள் வரலாற்றோடு மறைந்து காணப்படுகிறது. கொஞ்சம் உள்ளே போய்ப் பார்த்தால்தான் சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கிறது.

English summary
Does 'gaana' have anything to do with Ashargana? What does Chepauk mean? Most residents of the city probably spend a minute on this while waiting at a traffic light or for a bus, but move on. Over the years, street names have been twisted by many tongues to acquire a new personality and meaning. Some names have come to mean nothing, others given more meaning than was intended.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X