For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடலூர் நகராட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக மோதல்... 2 திமுக கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்

Google Oneindia Tamil News

கடலூர்: கடலூர் நகராட்சியின் நகர்மன்ற கூட்டத்தில் வாக்குவாதம் செய்த இரண்டு திமுக கவுன்சிலர்களுக்கு கூட்டத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

கடலூர் நகராட்சியின் நகர்மன்றக் கூட்டம், இன்று காலை நகராட்சித் தலைவர் சி.க.சுப்ரமணியன் தலைமையில் தொடங்கியது.

இந்நிலையில் நகர்மன்றத்தில் ஜெயலலிதா படத்தை அகற்றி திமுக தலைவர் கருணாநிதியின் படத்தை வைக்கக் கோரி திமுக கவுன்சிலர்கள் பிரச்சனையில் ஈடுபட ஆரம்பித்தனர்.

இதனால், கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அதிமுக மற்றும் திமுகவினரிடம் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. நேரம் போகப் போக வாக்குவாதம் அதிகமாகியது.

இதனையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக நகராட்சி தலைவர் சுப்ரமணியன் வாக்குவாதத்திற்கு காரணமான இரண்டு திமுக கவுன்சிலர்களுக்கு கூட்டத்தில் பங்கேற்க தடை விதித்து, வெளியேற உத்தரவிட்டார்.

மேலும், மற்ற இரண்டு நகர்மன்ற கூட்டங்களிலும் பங்கேற்க அவர்களுக்கு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் சுப்ரமணியன்.

English summary
Cuddalore DMK and ADMK volunteer argument about to remove Jayalalitha photo and want to fix Karunanidhi photo there. Municipal councilor suspended two DMK volunteer from two municipal meetings.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X